- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
காளான் வைத்து கிரேவி, காளான் பிரியாணி, காளான் கூட்டு, காளான் 65 அப்படின்னு அதிகமாக இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுறீங்க. அதே மாதிரி முட்டை வச்சும் தனியா, முட்டை பொரியல் முட்டை கிரேவி இந்த மாதிரி செஞ்சி இருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம காளான் முட்டை இரண்டையும் வைத்து ஒரு சூப்பரான ரோஸ்ட் செய்ய போறோம். இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியா இருக்கும். ஆனா டேஸ்ட் ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும் இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா வீட்ல ஒரு தடவை செஞ்சு பார்த்தீர்களா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
ரசம் சாதம் சாம்பார் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் பிரியாணி இது எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இதுல தேங்காய் துருவல் கொத்தமல்லி இலைகள் எல்லாமே சேர்த்து செய்யும் போது ரொம்ப ரொம்ப வாசனையாகவும் இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசமா இந்த மாதிரி ஒரு சூப்பரான ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. வீட்ல இருக்குறவங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த மாதிரி வித்தியாசமான ஒரு ரெசிபியை செஞ்சு கொடுங்க கண்டிப்பா பாராட்டிட்டு போவாங்க. வெங்காயம் தக்காளி இதெல்லாம் சேர்த்து வதக்கி செய்வதால் டேஸ்ட் அற்புதமா இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை செய்யும்போது கொஞ்சம் அதிகமாகவே செஞ்சு வச்சுக்கோங்க. கண்டிப்பா செஞ்சு வச்ச உடனே காலியாகிடும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான காளான் முட்டை ரோஸ்ட் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குடைமிளகாய் முட்டை தொக்கு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை நறுக்கிய இஞ்சி நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய பெரிய வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து வதக்கிய பிறகு காளான் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக வறுத்து காளானுடன் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய் துருவல் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான காளான் முட்டை ரோஸ்ட் தயார்.






