- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்தால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதிக வேலை செய்யாமல் சட்டென்று ஒரு சைடு டிஷ் செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் காளான் வேப்புடு செய்யுங்கள். காளான் வைத்து காளான் பிரியாணி, காளான் கிரேவி, காளான் பட்டர் மசாலா, காளான் பிரைடு ரைஸ் அப்படின்னு நிறைய காளான் ரெசிப்பீஸ் செஞ்சிருப்போம்.
ஆனால் இன்று நாம் செய்ய போகிற இந்த சிம்பிளான காளான் ரெசிபியை ஒரே ஒரு தடவை செய்து பார்த்தீங்கன்னா போதும் இந்த ரெசிபிக்கு நீங்கள் அடிக்ட் ஆகிடுவீர்கள் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான சிம்பிளான ரெசிபி தான் இது. இந்த சூப்பரான ரெசிபியை நீங்கள் சப்பாத்தி பூரிக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த காளான் ரெசிபியை சுட சுட சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.
இதுக்கு எந்த சைடு டிஷ்ஷுமே தேவைப்படாது. அதோட இந்த சூப்பரான காளான் ரெசிபியை நெய் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தேங்காய் சாதம்னு எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். இப்போது சுவையான காளான் வேப்புடு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் புளிச்சக்கீரை பருப்பு இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
Ingredients
Method
முதலில் மிளகாயை சுடு தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் நறுக்கிய காளானுடன் சோள மாவு, உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மிளகாய் விழுது, சீரகத்தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, பொரித்த காளான் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் எண்ணையிலேயே நன்கு வதக்கவும்.
பின் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் வேப்புடு தயார்.






