- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு பாஸ்தா மேகி இது எல்லாமே தான் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில சிக்கன் பாஸ்தா ஒயிட் சாஸ் பாஸ்தா அப்படின்னு பலவகையான பாஸ்தா ரெசிபி செஞ்சிருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம மஷ்ரூம் வச்சு ஒரு சூப்பரான மஸ்ரூம் ஒயிட் சாஸ் செய்ய போறோம். பன்னீர் பால் எல்லாமே சேர்த்து செய்றதால புரோட்டின் சத்துக்களும் நமக்கு அதிகமாவே கிடைக்கும். டேஸ்ட்டும் ரொம்ப அட்டகாசமாக இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரி ரெசிபிஸ் ரெஸ்டாரண்ட்ல தான் கிடைக்கும்.
ஆனா குழந்தைகளுக்கு கடையில் வெளியில் வாங்கி தராத விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில இந்த டேஸ்டான வித்தியாசமான ரெசிபியை கண்டிப்பாக வீட்ல செஞ்சு பாருங்க. சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். கொஞ்சம் கிரேவி கன்சிஸ்டன்ஸில செஞ்சாதான் சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியாக இருக்கும். மஷ்ரூமை நல்லா அரைச்சு செய்ய போறோம். இந்த ரெசிபியை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கூட கொடுத்துவிடலாம்.
அதிக காரம் இல்லாமல் இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க நிறைய மசாலாக்கள் இல்லாமல் ஏதாவது ரெசிபி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு பாருங்க. இதுல நம்ம காளானை அரைச்சு சேர்க்கறதால வித்தியாசமான டேஸ்ட்ல ரொம்ப பெரிய சூப்பரா இருக்கும் ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இப்ப வாங்க இந்த சுவையான மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான மஷ்ரூம் ஆம்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து பாஸ்தாவை சேர்த்து ஏழு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
பிறகு மஷ்ரூம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் பன்னீர் சேர்த்து பால் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்ததை ஒரு கடாயில் சேர்த்து ஆர்கானோ சில்லி ஃப்ளேக்ஸ் உப்பு சேர்த்து கலந்து பாஸ்தாவை சேர்த்து நன்றாக கலந்து இறக்கினால் சுவையான மஷ்ரூம் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.






