Advertisement
உடல்நலம்

நுரையீரல், சுவாசக்கோளாறுகள் போக்கும் முசுமுசுக்கை மூலிகை!

Advertisement

முசுமுசுக்கை… இந்த பெயரைக் கேட்டதும் சிலருக்கு வாயில் நுழையாது. வாய் தவறி முசுக்கை என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த மூலிகைக்கு முசுக்கை என்ற பெயரும் உண்டு. மொசுமொசுக்கை, அயிலேயம் என வேறு சில பெயர்களைக் கொண்ட இந்த மூலிகைக்கு `இரு குரங்கின் கை’ என்ற பெயரும் இருக்கிறது. முசு என்றால் குரங்கு என்ற பொருள் இருப்பதாகவும் இரண்டு தடவை முசுமுசு என்று வருவதால் இரு குரங்கின் கை என்று பொருள்படுவதாகவும் கூறுகின்றனர். வள்ளலார் வகைப்படுத்தியுள்ள ஐந்து ஞானமூலிகைகளில் முசுமுசுக்கையும் ஒன்று. சாலையோரங்கள், புதர் மண்டிய பகுதிகள் மற்றும் உயிர்வேலிகளில் மிகச்சாதாரணமாக வளரக்கூடிய இந்த மூலிகை கேட்பாரற்றுக்கிடக்கிறது.


முசுமுசுக்கை தோசை


கபத்தை சமநிலைப்படுத்தும் சக்தி கொண்ட மூலிகையாகக் கருதப்படும் முசுமுசுக்கை நுரையீரல் மற்றும் சுவாசக்கோளாறுகளுக்கு அருமருந்தாகும். சுவாசக்குழல், சுவாசப்பையின் நுண்ணறைகளில் உண்டாகக்கூடிய ரணம், அழற்சியை சரிபண்ணக்கூடிய ஆற்றல் இந்த மூலிகைக்கு உண்டு. இருமல், இழுப்பு, ஆஸ்துமா என பல்வேறு பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிய முசுமுசுக்கையை மிக எளிதாக அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமாக நாம் சாப்பிடும் தோசையை கொஞ்சம் மாற்றி அதாவது தோசை மாவுடன் முசுமுசுக்கை இலையை அரைத்துக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். காலை நேரச் சிற்றுண்டியாக இந்த தோசையை தயாரித்துக் கொடுத்தால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Advertisement


துவையல்


முசுமுசுக்கை இலையை நெய் விட்டு வதக்கி துவையலாகச் செய்தும் சாப்பிடலாம். கறிவேப்பிலை, மல்லித்துவையல் செய்வதுபோலவே முசுமுசுக்கையிலும் துவையல் செய்யலாம். முசுமுசுக்கையுடன் புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை, உளுந்து, தேங்காய் சேர்த்து துவையல் செய்யலாம். ஆனால், இதுபோன்ற மூலிகைகளை எடுத்து பயன்படுத்தும்போது உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் வைத்திருந்து பயன்படுத்துவது நல்லது. துவையல் மற்றும் தோசை மாவுடன் முசுமுசுக்கையை

Advertisement
கலந்து சாப்பிட்டு வந்தால் சளியுடன் கூடிய காய்ச்சல் மற்றும் நாக்குச்சுவையின்மை போன்றவை சரியாகும். சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் முசுமுசுக்கை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்துக் குளித்து நிவாரணம் பெறலாம். இப்படி குளிப்பதன்மூலம் உடல் சூடும் தணியும்; இளநரை மாறுவதுடன் வழுக்கை ஏற்படாமல் தடுக்க உதவும்.


நுரையீரல் புற்றுநோய்


இரைப்பிருமல்

Advertisement
குணமாக முசுமுசுக்கை இலை மற்றும் தூதுவேளை இலையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கிச் சாப்பிடலாம். முசுமுசுக்கை இலை 120 கிராம் என்றால் 80 கிராம் தூதுவேளை இலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் கலந்த பொடியில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து வெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் இரைப்பிருமல் சரியாகும். முசுமுசுக்கை இலையை மட்டும் காயவைத்துப் பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் சரியாகும். ஏற்கெனவே கூறியதுபோல ஆஸ்துமா நோய்க்கு முசுமுசுக்கை நல்லது என்பதால் நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது.


முசுமுசுக்கை கடலை சட்னி


முசுமுசுக்கையை பொடியாகவும், தோசையாகவும் சாப்பிட பிடிக்காதவர்களுக்கு வித்தியாசமான ஒரு இணை உணவு தயாரிப்பது பற்றி பார்ப்போம். முசுமுசுக்கை இலையுடன் கொத்தமல்லிக்கீரை, கொண்டைக்கடலை, சிறிது பெருங்காயம் சேர்த்து சட்னியாக தயாரித்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு ஏற்ற இந்த சட்னி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது. ரத்தத்தை சுத்திகரிப்பது, பசியைத்தூண்டுவது என பல்வேறு விதங்களில் நலம் பயக்கக்கூடியது முசுமுசுக்கை. எங்கே கிடைக்கும்? என்று கேட்பவர்களுக்காக ஒரு தகவல்… கீரை விற்கும் பாட்டிமார்களிடம் சொல்லிவைத்து வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால், மூலிகை விற்பனை மையங்களில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்.

Advertisement
Maria Bellsin

Recent Posts

இன்றைய ராசிபலன் – 30 ஏப்ரல் 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்திலும், வேலையிலும் கவனம் செலுத்த வேண்டிய…

2 மணி நேரங்கள் ago

இரவு டிபனாக ருசியான துவரம் பருப்பு அடை இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்க! 2 அடை அதிகமாவே சாப்பிடுவாங்க!

துவரம் பருப்பில் உடம்பிற்கு தேவையான அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. அதனால் தான் பல உணவை சமைப்பதாக இருந்தாலும் அதில் ஒரு…

11 மணி நேரங்கள் ago

ருசியான வெஜிடபிள் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில்…

11 மணி நேரங்கள் ago

தித்திக்கு சுவையில் ஆப்பிள் கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! பார்தாலே நாவில் எச்சி ஊறும்!

கீர் ஒரு சுவையான வட இந்திய ரெசிபி ஆகும். கீரில் பல வகைகள் உள்ளன. பாதாம் கீர், கேரட் கீர்,…

12 மணி நேரங்கள் ago

முட்டை போண்டா இப்படி செஞ்சி குடுங்க நிமிசத்துல எல்லாமே காலி ஆகிவிடும்

என்னதான் வாழைக்காய் பஜ்ஜி வெங்காய பஜ்ஜி வெங்காய போண்டா உளுந்து வடை பருப்பு வடை மசால் போண்டா சாப்பிட்டாலும் முட்டை…

14 மணி நேரங்கள் ago

சுவையான வெண்ணெய் புட்டு இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள்! மீண்டும் செய்ய சொல்லி கேட்பார்கள்!

அது என்ன வெண்ணெய் புட்டு அப்படின்னு யோசிக்கிறீங்களா இது அரிசி மாவுல பண்ணக்கூடிய ஒரு சுவையான கேக் இந்த மாதிரியான…

17 மணி நேரங்கள் ago