- Advertisement -
காரசாரமான முட்டை சுக்கா வறுவல் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்ம்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். மதிய உணவுக்கு ஏத்த சைடிஷ் ஒரு முறை இதை ட்ரை
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : எண்ணெயில் வதக்கிய கார முட்டை ரெசிபியை டக்குனு செய்வது எப்படி ?
- Advertisement -
பண்ணி பாருங்கள். அதனால் இன்று இந்த காரசாரமான முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள். இதை படித்து பார்த்து நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்.
முட்டை சுக்கா வறுவல் | Egg Chukka Recipe In Tamil
காரசாரமான முட்டை சுக்கா வறுவல் பற்றி தான் நாம் இன்று பார்க்க போகிறோம். இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். அனைவரும் விரும்ம்பி சாப்பிடுவார்கள் அடுத்த முறையும் இது போல் வைக்க சொல்லி கேட்பார்கள். மதிய உணவுக்கு ஏத்த சைடிஷ் ஒரு முறை இதை ட்ரை பண்ணி பாருங்கள். அதனால் இன்று இந்த காரசாரமான முட்டை சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
Yield: 4 people
Equipment
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 8 வேக வைத்த முட்டை சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும்.
- 1 கப் கடலெண்ணெய்
- கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
மசாலா அரைக்க:
- 1 மேஜைக்கரண்டி குருமிளகு
- 2 முட்டை உடைத்து
- 14 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 6 பல் பூண்டு
- ½ தேக்கரண்டி சீரகம்
- 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி பொடியாக நறுக்கியது
- ½ தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 1 தேக்கரண்டி வரக்கொத்தமல்லி தூள்
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- கொத்தமல்லி ஒரு கைப்பிடி
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் 2 முட்டையை உடைத்து மிக்சியில் போட்டு அதில் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு மையாக விழுதாக அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது வேகவைத்துள்ள முட்டையை சரிபாதியாக இரண்டு பாகங்களாக கத்தியால் வெய்ட்டிக் கொள்ளவும்.
- அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை மஞ்சள் கரு உள்ள பக்கத்தில் தடவி வெயிலில் வைக்கவேண்டும்.
- இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் கடலெண்ணெய் நடுவில் ஊற்றி நன்றாக காயவைக்க வேண்டும்.
- அடுத்து நன்றாக காய்ந்ததும் அதில் மசாலா தடவிய முட்டையை போட்டு சிறுதீயிலேயே நன்றாக பொன்னிறமாக வறுத்து பரிமாறவும்.
Nutrition
Protein: 14g | Fat: 18g | Saturated Fat: 6g | Cholesterol: 35mg | Sodium: 649mg | Potassium: 396mg | Vitamin A: 4IU | Vitamin C: 26mg | Calcium: 6mg | Iron: 18mg