மட்டன் சுக்கா ஒரு தடவை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்க வீட்ல இருக்குற எல்லாரும் நல்லா சாப்பிடுவாங்க!

- Advertisement -

மட்டன் எடுத்தால் அந்த மட்டன் வச்சு மட்டன் பிரியாணி மட்டன் தண்ணி குழம்பு மட்டன் கிரேவி அப்படின்னு நிறைய செய்வோம். ஆனா மட்டன் எடுத்தா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு பாருங்க. இந்த மட்டன் சுக்காவ அப்படியே சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ரசம் வச்சு ரசம் சாதத்துக்கு சைடு டிஷ்ஷா இந்த மட்டன் சுக்காவ வச்சு சாப்பிடலாம். ஒரு சிலருக்கு சிக்கன் பிடிக்காமல் கூட இருக்கும் இல்லனா சிக்கன் சாப்பிடக்கூடிய முடியாத நிலைமை கூட ஏற்படும். அந்த சமயத்துல இந்த மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே திருப்தியா இருக்கும்.

-விளம்பரம்-

நீங்க நிறைய முறையில மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு எப்போ மட்டன் சுக்கா சாப்பிடணும் அப்படின்னு தோணுனாலும் இந்த மாதிரி ஒரு முறையில தான் மட்டன் சுக்கா சாப்பிடுவீங்க. உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே இந்த மட்டன் சுக்கா ஒரு பேவரெட்டான ரெசிபியாக மாறிடும். சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இந்த மட்டன் சுக்காவ ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அட்டகாசமான காரசாரமான மட்டன் சுக்கா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
4 from 1 vote

மட்டன் சுக்கா | Mutton Chukka Recipe In Tamil

மட்டன் எடுத்தால் அந்த மட்டன் வச்சு மட்டன் பிரியாணி மட்டன் தண்ணி குழம்பு மட்டன் கிரேவி அப்படின்னு நிறைய செய்வோம். ஆனா மட்டன் எடுத்தா ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு பாருங்க. இந்த மட்டன் சுக்காவ அப்படியே சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஒரு சிலருக்கு சிக்கன் பிடிக்காமல் கூட இருக்கும் இல்லனா சிக்கன் சாப்பிடக்கூடிய முடியாத நிலைமை கூட ஏற்படும். அந்த சமயத்துல இந்த மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டா ரொம்பவே திருப்தியா இருக்கும். நீங்க நிறைய முறையில மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரே ஒரு தடவை இந்த மாதிரி ஒரு சூப்பரான மட்டன் சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் உங்களுக்கு எப்போ மட்டன் சுக்கா சாப்பிடணும் அப்படின்னு தோணுனாலும் இந்த மாதிரி ஒரு முறையில தான் மட்டன் சுக்கா சாப்பிடுவீங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: mutton chukka
Yield: 4 People
Calories: 143kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி மட்டன்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/4 டீஸ்பூன் கசகசா
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 3 பெரிய வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • ஒரு குக்கரில் மட்டனை கழுவி சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மூன்று விசில் விட்டு எடுக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு சேர்த்து வேக வைத்துள்ள மட்டனையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
  • ஒரு கடாயில் சீரகம் சோம்பு மிளகு கசகசா அனைத்தையும் சேர்த்து லேசாக வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து அந்த பொடியையும் மட்டனோடு சேர்த்து நன்றாக கிளறவும்.
  • அனைத்தும் நன்றாக வெந்து வந்தவுடன் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா தயார்.

Nutrition

Serving: 650g | Calories: 143kcal | Protein: 27.1g | Fat: 3.03g | Sodium: 150mg | Potassium: 189mg | Vitamin A: 68IU | Vitamin C: 263mg | Calcium: 26mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : ஒரு வித்தியாசமான சுவைல மட்டன் மல்லி செஞ்சு பாருங்க!