சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு. இவை இந்தியாவில் மிகப் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. இவை தேநீருடன் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். கட்லெட்டுகளில் பல வகை உண்டு. அதில் சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், ஃபிஷ் கட்லெட், வெஜிடபிள் கட்லெட், பன்னீர் கட்லெட், மற்றும் மஸ்ரூம் கட்லெட் பிரபலமானவை.
இவை செய்வதற்கும் எளிமையானவையும் கூட. இவை அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வேறு வேறு காய்கறிகளை சேர்த்து செய்கிறார்கள். வெவ்வேறு காய்கறிகள் சேர்த்தாலும் மட்டனுக்கு மாற்று கிடையாது. மசாலா பொருட்களுடன் சேர்த்து செய்யப்படும் இந்த கட்லெட் எளிதாக நாவில் கரையக் கூடியதாக இருக்கும். இந்த கட்லெட் வித்தியாசமான தனி சுவையைக் கொடுக்கும். மட்டன் கட்லெட் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு ஏற்ற உணவு வகை.
இது மாலை நேரங்களில் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்றதாகும். அது தவிர திடீரென வரும் விருந்தினர்களுக்கு உடனடியாக செய்வதற்கு ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களும் மட்டனால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே இந்த பதிவில் மட்டன் கட்லெட் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
மட்டன் கட்லெட் | mutton cutlet recipe in tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1/4 கி மட்டன்
- 5 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- உப்பு தேவையான அளவு
- 1 முட்டை
- எண்ணெய் தேவையான அளவு
- 1 கப் பிரெட் க்ராம்ஸ்
செய்முறை
- முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய மட்டன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்போது இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் விட்டு வதக்கவும்.
- மட்டன் வதங்கினதும் தோல் உரித்த உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து கலந்து சிறிது நேரம் வேக விடவும்.
- இந்த கலவை நன்கு வெந்ததும் ஆறவைத்து உருண்டை பிடித்து கட்லெட் போல் தட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பவுளில் முட்டையை அடித்து வைத்துக் கொள்ளவும். பின் அதனில் கட்லெட்டை பிரட்டி எடுத்து அதன்பின் பிரெட் கிராம்பில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தயார் செய்து வைத்த கட்லெட்டை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.