- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
அசைவ உணவுகளில் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவது தான் மட்டன். இந்த மட்டன் பலருக்கு மிகவும் விருப்பமான அசைவ உணவும் கூட. இதனை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அதில் ஒன்று தான் மட்டன் கோலா உருண்டை குழம்பு. செட்டிநாட்டு உணவு வகைகள் அனைத்துமே கொஞ்சம் வித்தியாசமாகவும் அதே சமயம் மிகவும் ருசியாகவும் இருக்கும். அப்படி ஒரு சுவையான ரெசிபி தான் இந்த மட்டன் கோலா உருண்டை குழம்பு. இது மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
பெரும்பாலும் குழந்தைகள் சிக்கனைத் தான் விரும்பி சாப்பிடுவார்கள். சிக்கன் 65, சில்லி சிக்கன், சிக்கன் குழம்பு போன்றவற்றையே சாப்பிடுவார்கள். ஆனால், மட்டனே பிடிக்காத குழந்தைகளும் விரும்பி உண்ணும் இந்த செட்டிநாடு ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டை குழம்பை செய்து கொடுத்துப் பாருங்கள். கண்டிப்பாக பாராட்டுகள் குவியும். முக்கியமாக மட்டன் பிடிக்காதவர்கள் இதனை சுவைத்தால், இதற்கு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக மட்டன் கோலா உருண்டை குழம்பை தென் மாவட்ட மக்கள் செய்வது வழக்கம். இது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்த மட்டன் கோலா உருண்டை குழம்பின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் இதனை குழம்பு செய்வதற்கு முன் பொரித்து எடுத்தால் நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இப்போது சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
முதலில் மட்டன், தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, சோம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய்த்தூள், கறிவேப்பிலை, உப்பு, பட்டை ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இதனை ஒரு பவுளுக்கு மாற்றி அதனுடன் கொத்தமல்லி மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
பின் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
அதன்பிறகு குழம்பு நன்கு கொதித்ததும் நாம் செய்து வைத்துள்ள மட்டன் உருண்டைகளை சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின் மட்டன் உருண்டைகள் நன்கு வெந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு தயார்.






