- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு மாதிரியான ரெசிப்பிஸ் ரொம்ப பிடிக்கும். ஒரு சிலருக்கு மசாலா அதிகமா சேர்த்து செய்கிற பிரியாணி பிடிக்கும் ஒரு சிலருக்கு மசாலாவே சேர்க்காத புலாவ் ரெசிபி ரொம்ப பிடிக்கும். வெஜ் புலாவ், பச்சை பட்டாணி புலாவ் அப்படின்னு வெஜ்ல நிறைய செஞ்சு இருப்பீங்க அதே மாதிரி நான் வெஜ்ல ஒரு சூப்பரான மட்டன் யக்னி புலாவ் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதில் நாம் மட்டனுடன் மசாலா பொருட்களை வேகவைத்து சேர்ப்பதால் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.
இந்த டேஸ்டான புலாவ் ரெசிபி கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இதுகூட ஏதாவது சிக்கன் கிரேவி பிரான் கிரேவி செஞ்ச தொட்டுக்கிட்டா ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு கொடுத்து பாருங்க குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு காரம் அதிகம் சேர்க்காமல் செய்ற ரெசிப்பிஸ் கொடுக்கணும் அந்த வகையில இந்த மாதிரி மசாலா அதிகமா சேர்க்காத ஒரு ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க.
இதுல பட்டை கிராம்பு ஏலக்காய் நெய் எல்லாமே சேர்க்கறதால டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா எப்பவுமே அவங்களுக்கு மட்டன் சிக்கனில் எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு, வறுவல் அப்படின்னு சமைச்சு கொடுக்காமல் இந்த மட்டன் யக்னி புலாவ் ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டீங்கன்னா அதுக்கப்புறமா அடிக்கடி செய்வீங்க. இந்த டேஸ்டான மட்டன் யக்னி புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை மட்டன் பிரியாணி
Ingredients
Method
முதலில் மட்டனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு, மிளகு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நான்கு விசில் விட்டு இறக்கவும்.
பின் இதனை வடி கட்டி மட்டனை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின் அதே குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் வேகவைத்த மட்டனை சேர்த்து அதனுடன் புதினா, கொத்தமல்லி, தயிர், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்த அரிசி, உப்பு மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மட்டன் யக்னி புலாவ் தயார்.






