இன்றைய சந்ததியினர்கள் செடி வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். நம் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே நாம் ஏதாவது செடியை வளர்க்க வேண்டும் என விரும்புவோம். ஒருவேளை வீட்டின் முன் அதிக இடம் இருந்தால் சொல்லவா வேணும். நம் வீட்டில் ஒரு சிறிய தோட்டம் வைத்து அதனை பராமரித்து வருவது மனதிற்கு ஒருவித அமைதியையும் சந்தோசத்தையும் தரும்.
செடி வளர்ப்பதில் கூட விடையங்கள்
ஆனால் செடி வளர்ப்பதில் நிறைய விடயங்கள் உள்ளன. என்ன செடி வளர்ப்பது? எப்படி வளர்ப்பது? எங்கே வளர்ப்பது? என நம்மில் அனைவருக்கும் இந்த கேள்வி எழும். அப்படி வீட்டில் செடி வளர்ப்பதில் அதிர்ஷ்டத்தை வரவழைப்பது, துரதிஷ்டத்தை விரட்டுவது, வீட்டின் வாஸ்துவை அதிகரிப்பது, துன்பத்தை நீக்கி இன்பத்தை பெருக்குவது, வீட்டில் சந்தோஷத்தை அதிகரிப்பது என பல விடயங்கள் உள்ளன.
செடியை தனியா வளர்ப்பதால் பிரச்சனை
அதேபோல வீட்டில் தனியாக ஒரு செடியினை மட்டும் வளர்க்கக்கூடாது என்று பல சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் வீட்டில் தனியாக ஒற்றை மரம் வளர்ப்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் ஒற்றுமையை குறைத்து விடும் என நம்பப்படுகிறது.
இருப்பினும் நம் வீட்டில் எந்த செடியினை தனியாக வளர்க்கலாம் என்றும் எந்த செடியினை தனியாக வளர்க்க கூடாது என்றும் பார்க்கலாம் வாருங்கள்.
வெற்றிலை செடி
மருதாணி செடி
முட்கள் நிறைந்த செடி
பப்பாளி செடி
கறிவேப்பிலை செடி
துளசி செடி

பிரச்சனை தரும் அரளி
அரளிச்செடி, வெற்றிலை செடியை வீட்டில் தனியாக வளர்ப்பதால் கணவன் மனைவி இடையே உள்ள ஒற்றுமை குறைந்து பிரச்சனைகள் ஏற்படும்.

சிக்கல் தரும் பப்பாளி மற்றும் கருவேப்பிலை
பப்பாளி செடியை தனியாக வளர்த்தால் வீட்டில் சிக்கல்கள் ஏற்படும். கருவேப்பிலை செடியை வீட்டில் தனியாக வளர்த்தால் அது வீட்டிலுள்ள செழிப்பை குறைத்து விடும். ஏன் அடிக்கடி கனவன் மனைவிக்குள் பெரிய பெரிய பிரசசனைகளை உருவாக்கி விடும்.

வளம் தரும் செடிகள்
கருவேப்பிலை செடியுடன் பப்பாளி செடியை சேர்த்து வளர்த்தால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் துளசி செடி வளர்த்து வந்தால் அது கவலைகளை நீக்கி என்றென்றும் சந்தோஷத்தை அளிக்கும். அரளிச் செடியை வீட்டின் முன் வளர்த்தல் நல்லது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


