ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இப்படி டிசைன் டிசைனாக பிரச்சனை ஒரு பக்கம் வந்தாலும் பொதுவான பிரச்சனைகள் என்று சில பிரச்சனைகள் இருக்கும். அதாவது நல்ல சம்பளத்துடன் வேலை, கணவன் மனைவி சண்டை, பண பிரச்சினை என இது போன்ற அனைவருக்கும் பொதுவான பிரச்சினைகளும் சேர்ந்து தான் இருக்கும். இதற்காக நம்மில் பலரும் பரிகாரங்களை செய்து செய்து செய்து மனமே வெறுத்து போயிருக்கும். இவர்கள் எல்லாம் இந்த ஒரே ஒரு கடவுளை மட்டும் கும்பிட்டால் போதும் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் யார் அந்த கடவுள் ? எப்படி கும்பிட வேண்டும் என்ற வழிமுறைகளை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நரசிம்மர்
மஹா விஷ்ணு தன் தீவிர பக்தனான பிரகலாதனின் பக்தியே இந்த உலகமே அறியும் வண்ணம் செய்வதற்காகவே நரசிம்மர் அவதாரத்தை கலியுகத்தில் மகாவிஷ்ணு எடுத்தார். இந்த நரசிம்மர் அவதாரத்தின் வழியாகவே இன்றளவும் நாம் அனைவருக்கும் அருள் தந்து நம்மை பாதுகாக்கிறார். அதனால் நரசிம்மர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருபவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும் தூள் துளாக உடைக்கப்படும். அதனால் நரசிம்மரை எந்த கிழமையில், எதற்காக கும்பிட வேண்டும், என்னென்ன பலன்களை கிடைக்கும் என்பதனை அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.
சாந்தமான கடவுள்
நரசிம்மர் பார்ப்பதற்கு தான் மனித உடலும் சிங்க முகமும் கொண்ட உக்கிரமான தோற்றதிலன இருக்கும் கடவுள் போல காட்சி அளிப்பார். ஆனால் அவரின் மனம் உண்மையிலேயே குழந்தை போல். அதை விட பக்தர்கள் வேண்டுதல் வைக்கும் போதெல்லாம் அவர் குழந்தையாக மாறிவிடுவார் அந்த அளவிற்கு சாந்தமான ஒரு கடவுள். இந்த நரசிம்மரை நாம் மனதார நினைத்து மனம் உருகி வேண்டும் பொழுது நாம் என்ன நினைத்து வேண்டினோமோ அந்த வேண்டுதல்களை அனைத்தையும் நடத்திக் காட்டுவதில் அவர் கெட்டிக்காரர்.
பிரிந்தவர்கள் சேர
அந்த வகையில் கணவன் மனைவி உறவில் சண்டை வந்து பிரிந்த தம்பதியர்கள் மீண்டும் கணவன் மனைவியாக இணைந்து வாழ வேண்டும் என்பவர்கள். வெள்ளிக்கிழமை தினங்களில் நரசிம்மரை வழிபட்டுவது வருவது சிறப்பானதாக இருக்கும். ஆனால் எந்த சூழ்நிலையிலும் யார் யாரை விட்டு பிரிந்து இருந்தாலும் மீண்டும் இணைவதற்கு மனம் தோன்றினால் போதும் நரசிம்மர் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து மனதார வேண்டிக் கொண்டு. அதே நாளில் அம்மனையும் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்து வந்தால் பிரிந்தவர்கள் மீண்டும் உங்களை தேடி வந்து சேர்வார்கள்.
நல்ல வேளை கிடைக்க
அதேபோல நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று பல நாட்களாக வேலைக்காக காத்திருப்பவர்கள் புதன்கிழமை அன்று நரசிம்மர் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வந்தால் நல்ல வேலை கிடைக்கும். என்னதான் இங்கு பலருக்கு திறமையும் வேலை செய்யும் துணிச்சலும் இருந்தாலும் அவர்கள் விரும்பி செய்யும் வேலைகள் கிடைப்பதில்லை அப்படியே அவர்களுக்கு வேலை கிடைத்தாலும் அந்த வேலையில் பல தடைகள் சிக்கல்கள் என இருந்து கொண்டே இருக்கும். பல நாட்களாக அரசு துறைகளில் வேலையில் சேர முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள். பெரிய பெரிய கம்பெனிகளிலும், பன்நாட்டு நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முயற்சி செய்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை தரிசனம் செய்துவிட்டு மனம் உருகி பிரார்த்தனை செய்து வந்தால். உங்கள் வேலை ரீதியான எந்த பிரச்சனை இருந்தாலும் அது சரியாகிவிடும்.
பண பிரச்சனை
இன்றைய நாட்களில் நமது வாழ்க்கையை செழிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் நம்மிடம் பணம் இல்லாத போது கடன் வாங்குவதும் அதை திருப்பிக் கொடுப்பதும் இதுபோன்று செய்வதால் தான் நம் குடும்பமும் நாமும் இன்று வரை நலமாக வாழ்ந்து வருகிறோம். சிலர் தேவைக்கு அதிகமாகவோ அல்லது அவர்களை எதிர்பார்க்காத வண்ணம் சில கடன் பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள். அப்படி எந்தவிதமான கடன் பிரச்சினைகளை மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவதாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமையில் நரசிம்மர் கோவிலுக்கு சென்று அவரை தரிசித்து வந்தால் உங்களுக்கு இருக்கும் மலை போல் இருக்கும் கடல் தொல்லை கூடாது பனிபோல் பறந்து விடும். அந்த அளவிற்கு பக்தர்களின் குறைகளை கேட்டு பூர்த்தி செய்வார், இந்த குணத்தில் நரசிம்மர் அற்புதமான கடவுள் ஆவார்.