- Prep
- 15 min
- Cook
- 10 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
அசைவ உணவில் கோழி குழம்பு முக்கியமானது. மீனுக்கு அடுத்தபடியாக நன்மை தரக் கூடியது நாட்டுக்கோழியே. பிராய்லர் கோழி தான் மிருதுவாகவும் சுவையாக இருக்கும் என்பது நிறையப் பேருடைய நினைப்பு. சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது நாட்டுக் கோழியே. பிராய்லர் கோழி வாங்கி சமைப்பதை விட, நாட்டுக் கோழி வாங்கி கிரேவி செய்து சாப்பிட்டால், கிரேவியின் சுவை அற்புதமாக இருப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. விடுமுறை நாட்களில் அதுவும் மழைக்காலத்தில் நன்கு காரசாரமாக அசைவ உணவை சமைத்து சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப் போவது மிகவும் ஈஸியான நாட்டுக்கோழி கிரேவியைப் பற்றி தான்.
நாட்டுக்கோழியைக் கொண்டு பல சுவையான ரெசிபிக்களை செய்யலாம். அதில் ஒன்று தான் இந்த நாட்டுக்கோழி கிரேவி. இந்த கிரேவி சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது பேச்சுலர்கள் செய்து சுவைக்கும் அளவில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டது. இந்த கிரேவி நன்கு காரசாரமாக சாதம், இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். நாட்டுக்கோழி அடித்து சாப்பிட்டால் உடம்புக்கு உரம் இட்டது போல் திம்மென்று இருக்கும் என்று சொல்லும் முன்னோர்களின் வாக்கு இன்று வரை பொய்க்கவில்லை என்று சொல்லலாம்.இந்த வாரம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் நாட்டுக்கோழியை வாங்கி நாட்டுக்கோழி கிரேவி செய்து வீட்டில் அனைவரையும் அசத்துங்கள்.
இதனையும் படியுங்கள் : காரசாரமாக நாட்டுக்கோழி இஞ்சி வறுவல் இப்படி மட்டும் செய்து பாருங்க பின் நீங்களே அடிக்கடி செய்வீங்க!
Ingredients
Method
முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் பின் நாட்டுக்கோழியை சேர்த்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சிக்கனுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் தயிர் மற்றும் சிக்கன் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கி, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கி விடவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நாட்டுக்கோழி கிரேவி தயார்.






