புரட்டாசி மாதத்தில் எப்பொழுதுமே நவராத்திரி ஆரம்பமாகும் அந்த வகையில் இந்த வருடம் அக்டோபர் மூன்றாம் தேதி நவராத்திரி முதல் நாள் தொடங்கப் போகிறது. அன்றைய தினத்தில் வீட்டில் கொலு வைத்த கலசம் வைத்து நவராத்திரியை சீரும் சிறப்புமாக தொடங்குவார்கள். ஒரு சிலர் அவர்களுடைய வீட்டில் கொலு வைக்க முடியாமலும் கலசம் வைக்க முடியாமலும் போனால் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள் ஆனாலும் நவராத்திரி வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும் அந்த வகையில் கொலு வைத்திருப்பவர்களும் வைக்க இயலாதவர்களும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

முப்பெரும் தேவியார்
நவராத்திரி என்பது முப்பெரும் தேவியர் ஆன துர்க்கை அம்மனுக்கும் லட்சுமி தேவிக்கும் சரஸ்வதி தேவிக்கும் கொண்டாடப்படும். மொத்தம் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனுக்காக அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவிக்காக கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்காக. நவராத்திரியின் முதல் நாள் அன்று துர்க்கை அம்மனை மகேஸ்வரி தாயாக நினைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
பயத்தைப் போக்கும் வழிபாடு
மகேஸ்வரி தாயாக நாம் வழிபாடு செய்யும்போது நமக்கு இருக்கக்கூடிய பயங்கள் அனைத்தும் தீர்ந்து தைரியம் கிடைக்கும். வாழ்க்கையில் இருக்கக் கூடிய கஷ்டங்களை எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவதற்கான தன்னம்பிக்கை கிடைக்கும். இப்படிப்பட்ட சூழலாக இருந்தாலும் அதனை வெற்றி கொண்டு செயல்பட தாயினுடைய அருள் நமக்கு தேவை அந்த வகையில் மன தைரியத்தை தரக்கூடிய வழிபாடு தான் முதல் நாள் வழிபாடு.
நவராத்திரி செய்ய வேண்டியவை
நவராத்திரியில் முழுவதும் வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் காலை மாலை என இரு வேளைகளிலும் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும்போது ஏதாவது ஒரு நெய்வேதியத்தை வைத்து பூஜை செய்வது நல்லது.வீட்டில் கொலு வைத்திருப்பவர்கள் சுமங்கலி பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் வீட்டிற்கு அழைத்து அவர்களை பூஜையில் கலந்து கொள்ளுமாறு சொல்ல வேண்டும்.
சுமங்கலி பெண்களுக்கு கொடுக்க வேண்டியவை
நவராத்திரி முதல் நாள் அன்று அனைவரும் பச்சை நிறத்தில் ஆடை அணிவது சிறப்பானது. பச்சை நிறத்தில் சுமங்கலி பெண்களுக்கு சேலை ஜாக்கெட் துணி வளையல் என்று அவரவர் வசதிக்கேற்ப கொடுக்கலாம். மாலை நேரத்தில் 5 மணியிலிருந்து 9:30 மணிக்குள் இந்த வழிபாடு செய்ய வேண்டும். மேலும் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு சாத்துக்குடியையும் வெண்பொங்கலையும் திருசாதமாக கொடுப்பது மிகவும் வழிபாடு செய்யும்போது அம்மனுக்கு உரிய பாடல்களை பாடி வழிபாடு செய்துவிட்டு பூஜையை முடித்துக் கொள்ள வேண்டும்.
நெய்வேத்தியம்
வழிபாட்டிற்கு நெய்வேத்தியமாக கருப்பு கொண்டைக்கடலை அல்லது வெள்ளை கொண்டை கடலை வடை சர்க்கரை பொங்கல் வெண்பொங்கல் போன்றவற்றை வைத்து வழிபடலாம். மேலும் பூஜை செய்யும் போது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். வீட்டிற்கு வந்த சுமங்கலிப் பெண்களும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.
மந்திரம்
ஓம் ஐம் மகேஸ்வரி தாயே நம
ஓம் சர்வ மங்களம் தருபவளே நம
ஓம் தடை நீக்கி அருள் புரிபவளே நம
ஓம் அபயகரத்தாளே நம
ஓம் ஆபத்பாந்தவளே நம்
என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்த பிறகு அரளி பூ மல்லிகை பூ வில்வ இலை போன்றவற்றை பயன்படுத்தி அர்ச்சனை செய்து வழிபடுவதன் மூலம் மகேஸ்வரி தாயாரின் முழு அருளையும் பெற முடியும். கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவரும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்




