நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த நீர் தோசை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று நீர் தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் நீர் தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் தோசையும் பிரமாதமாக பஞ்சு போன்று சாப்டாக இருக்கும். முக்கியமாக இந்த நீர் தோசை நீங்கள் செய்தால் உங்கள் குழந்தைகள் தான் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : பிரெட் துண்டுகளை வைத்து வீடே கமகமக்கும் தோசை சூடுவது எப்படி ?
அதற்கு காரணம் நீங்கள் இந்த தோசையை சுட்ட பின் சூடு ஆரிய பிறகு கூட தோசை மென்மையாகவும், மிருதுவாகவும் இருக்கும். இந்த தோசை உடன் நீங்கள் சாம்பார் சட்னி எது வைத்து சாப்பிட்டாலும் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் கார சட்னியுடன் நீங்கள் இந்த தோசையை சாப்பிடும் பொழுது அதன் சுவையை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இன்று இவ்வளவு ருசியான நீர் தோசையை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
நீர் தோசை | Neer Dosai Recipe in Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 பெரிய பவுள்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் பச்ச அரிசி
- ½ கப் துருவிய தேங்காய
- 2 ½ கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- நீங்கள் காலை உணவுக்காக நீர் தோசை செய்யப் போகிறீர்கள் என்றால் பச்சரிசியை முதல் நாள் இரவே தூங்குவதற்கு முன்னால் இரண்டு முறை தண்ணீரில் அலசி விட்டு பின்பு தண்ணீர் சேர்த்து நன்கு ஊரை விட்டு விடுங்கள்.
- அதன் பின் காலையில் பச்சரிசி உள்ள தண்ணீரை வடிகட்டி விட்டு பச்சரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரைக்கப் துருவிய தேங்காயும் சேர்த்துக் கொள்ளுங்கள் இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றாமல் முதலில் மிச்சியில் நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
- பின் மாவை கெட்டியாக அரைத்ததும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். மாவை சிறிது கையில் எடுத்து பாருங்கள் இன்னும் அரைக்க வேண்டும் என்றால் மறுபடியும் மிக்ஸியை சுற்றி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள. பின் ஒரு பெரிய பவுலில் மாவை மாற்றிக் கொள்ளுங்கள்.
- அதன் பின் அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதன் பின் ஒரு கப் பச்சரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் இதனுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் மாவு தயாராகி விட்டது.
- பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். கல் சூடேறியதும் மாவை ஒரு முறை நன்கு கலக்கி விட்டு இடைவெளி இல்லாமல் தோசை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்பு சிறிதளவு எண்ணெய் தோசை மேல் ஊற்றி விடுங்கள் பின்பு தோசை வெந்ததும் ஓரங்கள் தானாகவே மேலே தூக்கி வரும்.
- அப்படியே தோசை நான்காக மடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படியாக மீதம் இருக்கும் மாவிலும் தோசை சுட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அவ்வளவுதான் மென்மையான நீர் தோசை இனிதே தயாராகி விட்டது.