- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மட்டன் குழம்பு, கோழிக் குழம்பு வரிசையில் உள்ள மீன் குழம்புக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அலாதி பிரியம் உண்டு. பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. மீன் குழம்பு அப்படின்னு சொன்னாலே எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும். மீன் குழம்பு மட்டும் ரெண்டு மூணு நாள் வைத்து சாப்பிடலாம். இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். பழைய சாதத்துக்கு பழைய மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும் அதே போல் இட்லிக்கும் பழைய மீன் குழம்பு வைத்து சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும். மீன் குழம்பு அன்னைக்கு சாப்பிடுவதை விட ரெண்டு நாள் வச்சு சாப்பிடும் போது சொல்ல முடியாத அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும்.
அந்த அளவுக்கு டேஸ்ட்டான மீன் குழம்பு ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி வைப்பாங்க. இந்த மணமணக்கும் மீன் குழம்புகளில் பல வகைகள் உள்ளன. மீன் வகைகளும் ஏராளமா இருக்கு கட்லா மீன், ஜிலேபி மீன், பாறை மீன், வஞ்சரம் மீன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். இந்த மீன் குழம்பை வெவ்வேறு பகுதிகளில் அவரவர் உணவு முறைக்கு ஏற்ப வெவ்வேறு மசாலாக்கள் மற்றும் அங்கு கிடைக்கும் மீன் வகைகளை கொண்டு செய்கிறார்கள். அந்த வகையில் நாம் இன்று நெல்லூர் ஸ்டைலில் மீன் குழம்பு எப்படி வீட்டிலேயே சுவையாக எப்படி வைப்பது என்று பார்ப்போம்.
இந்த நெல்லூர் மீன் குழம்பு தேங்காயை இல்லாம நல்லா புளிப்பா காரசாரமா இதே செய்முறைல வச்சு பாருங்க எல்லாரும் ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவாங்க. ரெண்டு நாள் ஆனாலும் குழம்பு அப்படியே இருக்கும். விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இந்த ரெசிபியை இதே ஸ்டைலில் செஞ்சு கொடுத்து பாருங்க சாப்பிட்டு ருசியில அசந்து போயிடுவாங்க. இந்த மீன் குழம்பு நம்ம நல்லெண்ணெய் மட்டும் தான் சேர்த்து செய்யணும் அப்பதான் ருசி இன்னும் கூடுதலாக இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான நெல்லூர் மீன் குழம்பு தேங்காயே இல்லாம ருசியா எப்படி வைப்பது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கனவா மீன் மசாலா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி விட்டு, துண்டுகளாக நறுக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, புளி தண்ணீர் அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மாங்காய் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
மீன் துண்டுகள் நன்கு வெந்து, பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான நெல்லூர் மீன் குழம்பு தயார்.






