என்னதான் மட்டன் சிக்கன் முட்டை அப்படின்னா இருந்தாலும் கடல் உணவுகளாக கிடைக்கக்கூடிய மீன் நண்டு இறால் கனவா இது எல்லாமே ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். கடலோர பகுதிகளில் இருக்கிற மக்கள் எல்லாருமே கண்டிப்பா இந்த கடல் உணவுகள் தான் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில கடல் உணவுகளில் ஒரு சிலருக்கு ரொம்ப ஃபேவரட்டா இருக்கக்கூடியது தான் கனவா மீன். இத வச்சு நம்ம நிறைய ரெசிப்பிஸ் செய்யலாம்.கனவா தவா பிரை,கனவா 65, கனவா மீன் தொக்கு இந்த மாதிரி நிறைய ரெசிப்பிஸ் செஞ்சு புடிச்ச மாதிரி சாப்பிடலாம் அப்படி இருக்கும் போது இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான சிம்பிளான கனவா மீன் வச்சு செய்யக்கூடிய ஒரு கனவா மீன் மசாலா ரெசிபி தான் செய்யப் போறோம். இந்த ரெசிபியை சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
அது மட்டும் இல்லாம ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி ஆகவும் இது இருக்கும். இந்த சிம்பிளான சுவையான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. ஒரு சிலருக்கு நிறைய மசாலாக்கள் போட்டு செய்றத விட இந்த மாதிரி சிம்பிளான மசாலாக்கள் போட்டு செய்ற ரெசிபி தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில நல்லா காரசாரமா மீன் குழம்பு வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த ரெசிபியை வச்சிட்டீங்கன்னா போதும் சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க உங்களுக்கு யாராவது ரொம்ப பிடிச்சவங்க வீட்டுக்கு வராங்க அப்படின்னா அவங்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபியை செஞ்சு கொடுங்க. ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிட்டு விட்டு போவாங்க. இந்த ருசியான ரெசிபியை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.
கனவா மீன் மசாலா | Squid Fish Masala Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/2 கி கனவா மீன்
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் மல்லி தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் சோம்பு
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- கனவா மீனை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சோம்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- மல்லித் தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கி கனவா மீனை சேர்த்துக் கொள்ளவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான கனவா மீன் மசாலா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை கனவா மீன் வாங்குனா ஒரு தடவை இந்த மாதிரி ருசியான கனவா மீன் தொக்கு ட்ரை பண்ணி பாருங்க!