- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- Kerala
- Course
- LUNCH
அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மீன் வகைகளிலே மிகவும் சிறியதாக இருப்பது நெத்திலி மீன். ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை கேரளா ஸ்டைலில் சமைக்க போகின்றோம். இதன் பெயர் நெத்தலி மீன் அவியல்,இது ஒரு பாரம்பரியமான சமையல். நெத்தலி மீன் அவியல் மீன் அவியல் செய்வது எளிது. இது மிகவும் ருசியாக இருக்கும். வாங்க நாமும் இந்த வித்தியாசமான நெத்தலி மீன் அவியல் கற்றுக் கொள்வோம்.
Ingredients
Method
துருவிய தேங்காயுடன் சிறிதாக வெட்டிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி,மஞ்சள் துள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துபிசையவும்.
இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரம் ஒன்றில் வேக வைக்கவும். அதனுள் சுத்தம் செய்யப்பட்ட மீனையும், கறிவேப்பிலையும் இட்டு நன்றாக அவிய விடவும்.
ஈரப்பதம் போகும் வரைநன்றாக கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும் . பின்னர் சிறிதளவு எண்ணைய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி விடவும்.
வறுவல் நன்கு பொன்னிறமாக வந்த பின்னர் சிறிதளவு புளி விட்டு இறக்கவும இருபதே நிமிடங்களில் சுவையான நெத்தலி மீன் அவியல் தயார்.






