- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
என்னதான் மட்டன், சிக்கன், மீன், முட்டை அப்படின்னு நிறைய இருந்தாலும் ஒரு சிலருக்கு கருவாடு அப்படின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும். கருவாட்டு குழம்பு, கருவாட்டு தொக்கு, கருவாடு ப்ரை எல்லாமே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில் கருவாடு வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான பிரை ரெசிபி பாக்க போறோம். நெத்திலி கருவாடு வச்சு மசாலா எல்லாம் கலந்து செய்ய போற இந்த ப்ரை அவ்ளோ ருசியா இருக்கும். ரசம் சாதத்துக்கு சாம்பார் சாதத்துக்கு சைடு டிஷ் ஆக வைத்து சாப்பிட ஒரு சூப்பரான அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும்.
இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணாம ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. கருவாடு பிரியர்களுக்கு கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து அசத்துங்க ரொம்ப ரொம்ப சிம்பிளான அதே நேரத்துல ரொம்ப ரொம்ப டேஸ்ட்டான ஒரு ரெசிபி இது. நல்லா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
புளிப்பா காரசாரமாக சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா இந்த மாதிரி ஒரு ரெசிபியை செய்து பாருங்கள் கண்டிப்பாக அவ்ளோ ருசியாக இருக்கும். இந்த டேஸ்டான ருசியான ரெசிபியை கண்டிப்பாக மிஸ் பண்ணாம ஒரு தடவை சாப்பிட்டு பாருங்க. வீட்ல சிக்கன் மட்டன் எதுவுமே செய்ய முடியல அப்படின்னா நெத்திலி கருவாடு வாங்கி இந்த மாதிரி செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான அருமையான நெத்திலி கருவாடு ப்ரை ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நெத்திலி கருவாட்டை கழுவி சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
அதனுடன் மிளகாய் தூள் சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லி தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ளதை சேர்த்து கருவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு கருவாடு சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடத்திற்கு பிறகு இறக்கினால் சுவையான நெத்திலி கருவாடு ப்ரை தயார்.






