மீன் குழம்பை விட ஒரு சிலருக்கு கருவாட்டு குழம்பும் கருவாட்டு தொக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் பழைய சாதத்துக்கு எல்லாம் மத்த சைடு டிஷை விட கருவாட்டு தொக்கு தான் ரொம்ப ருசியா இருக்கும். ரெண்டு நாள் ஆனா கூட இந்த கருவாட்டுத் தொக்கு கருவாட்டு குழம்பு எல்லாம் கெட்டுப் போகாமல் இருக்கும் அந்த வகையில் நிறைய கருவாடுகள் இருந்தாலும் நெத்திலி கருவாடு எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒன்னு அந்த நெத்திலி கருவாடு வச்சு இன்னைக்கு நம்ம சூப்பரான பாடசாலமான ஒரு தொக்கு தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம். இந்த கருவாட்டு தொக்க இட்லி தோசைக்கும் கூட சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும்.
அது மட்டும் இல்லாம சுட சுட சாதத்துக்கும் எந்த கருவாட்டுத் தொக்கு ரொம்பவே ருசியா இருக்கும். குழந்தைகளுக்கும் சின்ன வயசுல இருந்தே கருவாடு எல்லாம் கொடுத்து பழகணும் அதுக்கு இந்த மாதிரி சூப்பரான ஒரு கருவாட்டு தொக்கு செஞ்சா உங்களுக்கு கொடுத்தீங்கன்னா சாப்பிட்டு பழகிக்கு வாங்க. இந்த நெத்திலி கருவாட்டு தொக்கு உங்க வீட்ல செஞ்சிங்கனா பக்கத்து தெரு வரைக்கும் வாசனை போகும் அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான நெத்திலி கருவாட்டு தொக்கு காரசாரமா டேஸ்டா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
நெத்திலி தொக்கு | Nethili Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1/4 கி நெத்திலி கருவாடு
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 1 டீஸ்பூன் மிளகு
- 5 வர மிளகாய்
- 7 பல் பூண்டு
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 கொத்து கறிவேப்பிலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- நெத்திலி கருவாட்டை சுடு தண்ணீரில் சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயமும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இரண்டும் மசிந்து வந்த பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு காய்ந்த மிளகாய் பூண்டு உப்பு மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து அரைத்து அந்த மசாலாவை சேர்த்து அனைத்தையும் ஒன்றாக வதக்கவும்.
- இப்பொழுது கழுவி வைத்துள்ள நெத்திலி கருவாட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைத்த இறக்கினால் சுவையான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான நெய் மீன் கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!