புதிய வீட்டிற்கும் போகும் போதும் மறக்காமல் இதை மட்டும் செய்யுங்கள்!

- Advertisement -

ஒருவன் அவன் வாழும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என விரும்பினால் அவன் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதுமானதாக இருக்காது. அவனை சுற்றியும் எப்பொழுதும் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அதிகம் செலவிடுவது தான் இருக்கிற வீட்டிலும் தன் வேலை பார்க்கும் இடத்திலும் தான் அப்படி அவன் இருக்கும் இடம் யாவும் மகிழ்ச்சிகள் நிறைந்து காணப்படுமேயானால் அவன் வாழ்விலும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். அப்படி உங்கள் குடும்பத்திலும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்து இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள் புதியாக ஒரு வீட்டிற்கு குடியேற செல்லும் போது இப்படி செய்து பாருங்கள், உங்கள் வீடு முழுவதும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிரம்பி வழியும்.

-விளம்பரம்-

வீட்டின் பங்கு

பலருக்கு அவர்கள் வசிக்கும் வீடு சொந்த வீடாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். பலருக்கு வாழ்வின் இலட்சியமே சொந்த வீடு கட்டி அங்கு வாழ்வதாக தான் இருக்கும். ஆகையால் நம் குடும்பமான வாழப் போறோம் வீடு நம் சொந்த வீடாக இருந்தாலும் சரி அல்லது வாடகை வீடாக இருந்தாலும் சரி நாம் புதியதாக அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து போகும் போது நாம் நினைப்பதெல்லாம் நம் வீட்டின் அருகில் இருப்பவர்களும், வீட்டை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நம்மிடம் நட்புறவுடன் நல்லபடியாக பழக வேண்டும் என்று தான் நினைப்போம் அதற்கு தான் ஆசைப்படுவோம்.

- Advertisement -

வாழ்க்கையே சோகமாக மாறிவிடும்

அப்படி நாம் வசிக்க போகும் வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும் என்று ஊறுதியாக சொல்ல முடியாது. அப்படி பலருக்கும் அமையாது அதிலும் ஒருவர் சொந்தமாக இடம் வாங்கி அழகாக பார்த்து பார்த்து கட்டிய அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்து போகும் போது அந்த வீட்டில் சந்தோசமும், மகிழ்ச்சியும் நினைக்கவில்லை என்றால் அவர்கள் மனம் நொந்து அவர்களின் வாழ்க்கை ஒரு சோக வாழ்க்கையாக மாறிவிடும். அதனால் ஒரு மனிதனின் வாழ்வில் அவன் வாழ்கின்ற வீடும் அவன் துக்கம், கஷ்டங்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும்.

பால் காய்ச்சுதல்

ஆனால் நீங்கள் வசிக்கப் போகும் வீடு வாடகை வீடாக இருந்தாலும் சரி, சொந்த வீடாக இருந்தாலும் சரி புதியதாக ஒரு வீட்டுக்கு செல்லும்போது. அங்கு பசு மாட்டின் பாலை பொங்க விட்டு பால் காட்சுவது நாம் ரெம்ப காலமாக செய்து வரும் ஒரு பாரம்பரியம். எப்படி பால் காய்ச்சி போதும் பால் பொங்கி வருகிறதோ. அது போல் நம் வீட்டிலும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் பொங்கி வழியும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் தான் இன்றைய வரைக்கும் யார் புதிதாக வீடுகளுக்கு வசிக்க போனாலும் சரி முதலில் பால் காய்ச்சி விட்டு தான் அடுத்தக்கட்ட வேலைகளை அவர்கள் பார்க்கத் தொடங்குவார்கள்.

வெள்ளி நாணயம்

இப்படி நாம் பால் காய்ச்சும் போது கோமாதாவின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் மகாலட்சுமி தேவியின் அருளும் நமக்கு கிடைக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைத்து விட்டாலே போதும். நாம் வீடு எப்போதும் லட்சுமி கடாட்சமாக, சுபிட்சத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும். அதற்காக நீங்கள் புதியதாக செல்லும் வீட்டில் பால் காய்ச்ச பயன்படுத்தும் பாத்திரம் பித்தளை பாத்திரமாக இருக்க வேண்டும் அல்லது வெள்ளி பாத்திரமாக இருக்க வேண்டும். அந்த பாத்திரத்தில் பசும் பால் ஊற்றி விட்டு அதனுடன் ஒரு வெள்ளி நாணயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

வாரம் ஒரு முறை

அதன் பின் அந்த பால் பொங்கி வரும் போது அந்த வெள்ளி பாத்திரத்துக்குள்ளையே இருக்க வேண்டும் அதன் பிறகு பொங்கி வந்த பாலை எப்போதும் போல் அனைவருக்கும் குடிக்க கொடுப்போம். அதற்கு அப்புறமாக நான் பாத்திரத்துகுள் போட்ட வெள்ளி நாணயத்தை எடுத்து பூஜை அறையில் பத்திரப்படுத்திக் கொள்ளவும். பின்பு உங்கள் வீட்டில் வாரத்திற்கு ஒருமுறை பால் காய்ச்சும் போதெல்லாம் அந்த வெள்ளி நாணயத்தை அந்த பாத்திரத்துக்குள் போட்டு பால் காய்ச்சுங்கள். நீங்கள் இப்படி செய்யும்போது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோசமும் நிரந்தரமாக குடியிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here