- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பீன்ஸ் வச்சு ஒரு சூப்பரான முட்டை ப்ரை இந்த மாதிரி செஞ்சு பாருங்க கண்டிப்பா வித்தியாசமான டேஸ்ட்ல ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும். பீன்ஸ் வச்சு பீன்ஸ் பருப்பு உசிலி பீன்ஸ் பொரியல் பீன்ஸ் கேரட் போட்டு சாம்பார் இந்த மாதிரி செஞ்சிருப்பீங்க ஆனா பீன்ஸ் வச்சு கொஞ்சம் வித்தியாசமா இந்த முட்டை ப்ரை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். பீன்ஸ் காய்கறியில நிறைய நார் சத்துக்கள் இருக்கிறதால உடம்புக்கு நிறைய நன்மைகளை கொடுக்கக்கூடியது முக்கியமா செரிமான பிரச்சனைகள் இருந்துச்சுன்னா கண்டிப்பா இந்த பீன்ஸ் அடிக்கடி உணவுல சேர்த்துக் கொள்ளணும்.
டேஸ்டான இந்த ரெசிபியை கண்டிப்பா நீங்க ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க. முட்டை ரொம்ப பிடிக்கும் அப்படின்னா இந்த பீன்ஸ் முட்டை ப்ரை செஞ்சு பாருங்க கண்டிப்பா ஒரு வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். சாம்பார் சாதம், காரக்குழம்பு, தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம் எல்லாத்துக்குமே இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். அதனால எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை டேஸ்டான பொரியல் செஞ்சு பாருங்க.
கண்டிப்பா வீட்ல இருக்க கூடிய குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த பொரியல் செஞ்சு அதுல சாதம் போட்டு கிளறி குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸா கொடுத்துவிடலாம். குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் வேலைக்கு போறவங்களும் கூட சட்டுனு இந்த ரெசிபியை செஞ்சு சாதம் போட்டு கிளறி எடுத்துட்டு போகலாம். ரொம்ப ரொம்ப ஹெல்தியான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பீன்ஸ் முட்டை பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய சப்பாட்டுக்கு ஏற்ற பீன்ஸ் கூட்டு செய்வது எப்படி ?
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
கருவேப்பிலை சேர்த்து பெரிய வெங்காயத்தையும் பொடி பொடியாக சேர்த்து,பீன்ஸ் உப்பு சேர்த்து வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வெந்ததும் மிளகாய் தூள் மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பச்சை வாசனை போனதும் முட்டையை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் பீன்ஸ் முட்டை ப்ரை தயார்.






