- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா.
அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான சிக்கன் முந்திரி சுக்கா செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சப்பாத்தி, பூரிக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இருக்க இப்படி வித்தியாசமான ஸ்டைலில் சிக்கன் முந்திரி சுக்கா செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் ரெசிபி பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். இப்போது சுவையான சிக்கன் முந்திரி சுக்கா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் சிக்கனை சேர்த்து தண்ணீர் விடாமல் மூடி வைத்து வேக விடவும். சிக்கன் முக்கால் பாகம் வெந்ததும் சுக்கா மசாலா சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
பின் கொத்தமல்லி, மிளகு தூள் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சிக்கன் முந்திரி சுக்கா தயார்.






