- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Side Dish, starters
எப்போதும் ஒரே மாதிரியாக சமைக்காமல் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, அதே நேரத்தில் உடலுக்கு கேடு இல்லாமல் அப்படியே நமக்கும் கொஞ்சம் ஈஸியாகவும் ஏதாவது சமைத்தால் நன்றாக தானே இருக்கும். அப்படி ஒரு ஈஸியான ரெசபி தான் இந்த கறிவேப்பிலை சிக்கன்.அதிலும் வெங்காயம் சேர்க்காமல் சிக்கன் ரெசபி வாங்க எப்படின்னு பார்க்கலாம்.குழந்தைகளுக்கு அசைவத்தில் எத்தனை வகைகள் இருந்தாலும், இந்த சிக்கன் மீது மட்டும் தனி ஈர்ப்பு தான்.
சிக்கனை என்ன தான் விரும்பி சாப்பிட்டாலும், வீட்டில் கிரேவி போன்றவைகளை அவ்வளவாக விரும்பி உண்பதில்லை. நீங்கள் ஒரு முறை இப்படி சமைத்து பாருங்கள். இந்த கறிவேப்பிலை சிக்கன், ஹோட்டல் சிக்கன் சுவையிலும் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இதில் மிளகு, இஞ்சி, பூண்டு, மஞ்சள், போன்ற பொருட்களை சேர்த்து செய்வதால், நம் குழந்தைகளின் உடலுக்கும் நல்லது.
சிக்கனில் உள்ள வைட்டமின்கள் அதிக ப்ரோடீன் ,தசைகளை வலுவடையச் செய்யும். சிக்கன் பொதுவாகவே அனைவருக்கும் பிடிக்கும்.. அது மட்டுமின்றி கறிவேப்பிலை சிக்கன் நல்ல சுவையான ஒரு உணவும் கூட. இந்த சிக்கன் வைத்து ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கறிவேப்பிலை சிக்கன் எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். தேவையான பொருட்கள்
Ingredients
Method
முதலில் ஒரு பெளலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் மிளகாய் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மல்லித் தூள், மிளகுத் தூள் தலா ஒரு ஸ்பூன் சேர்த்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், சேர்த்து பிரட்டி 6 மணிநேரம் ஃப்ட்ரிட்ஸில் வைத்து ஊற வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதே எண்ணெயில் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயை மொறுமொறுவென்று பொரித்து, பேப்பர் டவலில் வைத்துக் கொள்ளவும். பின் பச்சை மிளகாயை தனியாக பிரித்து வைத்து, கறிவேப்பிலையை மட்டும் கையால் நொறுக்கி விட வேண்டும்.
பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகள், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, தோடு சிறிது மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு பிரட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை சிக்கன் ரெடி






