- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- Fry, Side Dish
ரத்தப்பொரியல் என்பது மற்ற காய் பொரியல் போன்ற ஒரு பக்க உணவாகும். ரத்த பொரியல் என்பது ஆட்டின் ரத்தத்தில் தயாரிக்கப்படும் உணவு. இது சாதம் மற்றும் ரொட்டி ஆகியவற்றுடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். சப்பாத்தியுடன் கூட சாப்பிடலாம். இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ள ஆட்டு ரத்த பொரியல் ஒரு முறை இப்படி செஞ்சி சாப்பிடலாம். இரத்த வறுவல் ஒரு எளிய உணவாகும், மேலும் எளிதில் சமைக்கலாம்.
ஆட்டு ரத்தத்தில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதால் டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் அருமையானது. ரத்தப் பொரியலை இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தேங்காய் சேர்த்து ஆட்டு இரத்தத்தை பொரியலாக செய்து சாப்பிடலாம். வாங்க இதை எப்படி செய்து சாப்பிடலாம் என்ற குறிப்பை தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து மூடி வேக வைக்கவும்.
கத்தியால் நடுவில் விட்டு பார்த்து ஒட்டாமல் வருகிறதா என உறுதிப்படுத்தி இறக்கவும்.பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடலைப்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து ஒரு சுற்று அரைத்து வைக்கவும்.
வேகவைத்த ரத்தத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய ரத்தத்தில் கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு தாளித்து வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசைந்து வைத்திருக்கும் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
சுவையான ரத்தப்பொரியல் தயார்.






