- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
எக் ரைஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி கிரீன் எக் ரைஸ் கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க ஒரு தடவை இந்த கிரீன் எக் ரைஸ் செஞ்சி பாருங்க அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் எல்லாமே அரைச்சு செய்யும் போது நல்ல கமகமன்னு சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். வீட்ல இருக்கக்கூடிய நார்மல் அரிசில கூட செய்யலாம். பாஸ்மதி அரிசி இருந்தா பாஸ்மதி அரிசிகள் செய்யும் போது இன்னுமே அதிக ருசியாக இருக்கும்.
ஒரே ஒரு தடவை இந்த மாதிரி பாஸ்மதி அரிசியில் கிரீன் எக் ரைஸ் செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா விரும்பி சாப்பிட்டு வருவாங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எந்த சைட் டிஷும் தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம். இந்த டேஸ்ட்டான ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்கிற சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க.
இந்த டேஸ்டான சுவையான கிரீன் எக் ரைஸ் கண்டிப்பா மிஸ் பண்ணாம செய்ய வேண்டிய ஒரு ரெசிபி. இந்த ரெசிபி செய்வதற்கு ரொம்ப ரொம்ப ஈஸியான ஒரு ரெசிபி. சட்டுனு செஞ்சு முடிச்சிடலாம். இந்த ருசியான ரெசிபிக்கு எவ்வளவு வேணும்னாலும் சாப்பிட்டுகிட்டே இருப்பாங்க. புதினா கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து செய்ததால் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. இப்ப வாங்க இந்த சுவையான கிரீன் எக் ரைஸ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை பாஸ்தா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க செம டேஸ்டா இருக்கும்!!
Ingredients
Method
பாஸ்மதி அரிசியை அரைவேக்காடு வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
மிக்ஸி ஜாரில் புதினா இலைகள் கொத்தமல்லி இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை வெங்காயத்துடன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி உப்பு சேர்த்து சாதம் போட்டு கிளறவும் இறுதியாக கொத்தமல்லி இலைகள் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான கிரீன் எக் ரைஸ் தயார்.






