- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- dinner, Side Dish
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான ஹைதராபாத் சிக்கன் முர்க் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த சிக்கன் ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
மேலும் இது சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இருக்க இப்படி வித்தியாசமாக ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் முர்க் செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் ரெசிபி பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். இப்போது சுவையான ஹைதராபாத் சிக்கன் முர்க் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் டிக்கா ரோல் இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது நேரம் ஊற வைத்து பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, சோம்பு, பிரியாணி இலை, சோம்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் தயிர் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அதன்பிறகு சிக்கன், புதினா, கொத்தமல்லி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி அரைத்து வைத்துள்ளதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இந்த கிரேவி நன்கு கொதித்து வந்ததும் கரம் மசாலா தூள், மிளகு தூள், நெய் சேர்த்து கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் சிக்கன் முர்க் தயார்.






