- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
பொதுவாக நாம் அனைவருக்குமே அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அசைவ உணவு மிகவும் பிடித்த நபர்களுக்கு மிக மிக பிடித்து விரும்பி சாப்பிடுவது சிக்கன் தான். சிக்கன் பிரியர்கள் அனைவரின் உணவு பட்டியலிலும் இந்த சிக்கன் இடம் பெற்றிருக்கும். அப்படி உங்கள் வீட்டில் அடிக்கடி சிக்கன் சமைப்பீர்களா? அப்படி சிக்கன் பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த சிக்கனை ஒரே முறையிலேயே செய்து சுவைத்து சலித்து போய்விட்டதா. அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். இன்றைய பதிவில் மிகவும் சுவையான இன்ஸ்டன்ட் சிக்கன் மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்வோம். இந்த இன்ஸ்டன்ட் சிக்கன் ரோஸ்ட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
மேலும் இது ரசம் சாதம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சிக்கன் 65, சிக்கன் மசாலா, சிக்கன் கிரேவி என செய்ததையே திரும்பத் திரும்ப செய்து போர் அடிக்காமல் இப்படி வித்தியாசமாக இன்ஸ்டன்ட் சிக்கன் மசாலா ரோஸ்ட் செய்து கொடுங்கள். நாவுக்கும் புது சுவையாக இருக்கும். குறிப்பாக இந்த சிக்கன் ரோஸ்ட் பேச்சுலர்கள் செய்யும் வகையில் மிகவும் ஈஸியான செய்முறையைக் கொண்டிருக்கும். இதை வீட்டில் நீங்கள் முயற்சித்தால், நல்ல பாராட்டைப் பெறலாம். சுவையான இந்த இன்ஸ்டன்ட் சிக்கன் மசாலா ரோஸ்ட் நீங்க செஞ்சு கொடுக்கும் போது உங்க வீட்ல இருக்கிற எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்போது இந்த சிக்கன் வகைகளில் ஒன்றான இன்ஸ்டன்ட் சிக்கன் மசாலா ரோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் தொக்கு ஊறுகாய் இந்த மாதிரி செஞ்சு பாருங்க பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
மசாலா நன்கு தொக்கு பதத்திற்கு வந்ததும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து சிறிதளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
அதன்பிறகு சிக்கன் நன்கு வெந்து தண்ணீர் நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான இன்ஸ்டன்ட் சிக்கன் மசாலா ரோஸ்ட் தயார்.






