- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
நம்ம வீட்ல ஒரே மாதிரி பிரியாணி, புலாவ், தக்காளி சாதம் செய்வோம். ஆனால் அது எல்லாமே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரி இருக்கு. புதுசா ஏதாவது ரெசிபி ட்ரை பண்ணலாமா. அப்படின்னு யோசிப்பவர்களுக்கு இந்த குறிப்பு உதவியாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாக தான் இந்த ரெசிபி இருக்கும். ஆனால், இதன் ருசி அருமையாக இருக்கும்.
கீமா ரைஸ் வீட்டில் செய்தல் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.மட்டன் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது. ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.
புலாவ்,பிரியாணி, பிரியர்கள் இந்த மாதிரி கீமா போட்டு ரைஸ் செஞ்சு பாருங்க அடிக்கடி செய்வீங்க! விதவிதமான ரைஸ் வகைகளில் அதிகமான மசாலாக்கள் சேர்க்காமல் செய்யப்படுவதால் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான சுவையான இந்த கீமா ரைஸ் ரொம்பவே பிடித்து போய்விடும். சூப்பரான டேஸ்டியான ரொம்பவும் சுலபமாக வீட்டிலேயே எப்படி சுவையான கீமா ரைஸ் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்
Ingredients
Method
தேவையானவற்றை எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலம், ரம்பை இலை, லவங்கம், நறுக்கிய வெங்காயம், வெங்காயத் தண்டு போட்டு வதக்கவும்.
பொன்னிறமானதும் இஞ்சி, பூண்டு விழுது மட்டன் ஸ்டாக் போட்டு வதக்கவும்.
தக்காளி,மட்டன் கீமா, தூள் வகைகளை எல்லாம் போட்டு கிளறி விடவும்.அதன் பிறகு தயிர், எலுமிச்சை சாறு, மல்லி தழை, உப்பு சேர்த்து வேக விடவும்.
பின் அரிசியை கழுவி கீமா குருமாலில் போட்டு ஒன்றிற்கு ஒன்றரை மடங்கு தண்ணீர் விட்டு 2 விசில் வேக விடவும்.
சுவையான கீமா ரைஸ் தயார்.






