- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65 என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு சிங்கி இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு வறுவல் தான் இப்போது பார்க்க போகிறோம்.
நீங்கள் அசைவ பிரியரா? உங்களுக்கு இறால் ரொம்ப பிடிக்குமா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது. இந்த வார கடைசில் என்ன நான் வெஜ் சமைக்கலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ இது போன்று சிங்கி இறால் செய்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். அது மட்டும் அல்லாமல் சாதமும் காலியாகிவிடும், சிங்கி இறால் காலியாகிவிடும்.
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சிங்கி இறால் வறுவல் இது போன்று ஒரு முறை செய்து அதிகமாக சாப்பிட பிடிக்காதவர் கூட விரும்பி சாப்பிடுவாங்க, அதுமட்டும் அல்லாமல் சிங்கி இறால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்படி இந்த சிங்கி இறால் செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து ஒருமுறை செய்து பாருங்க.
Ingredients
Method
பாத்திரத்தில் சிங்கி இறாலை எடுத்து சுடுநீரில் போட்டு, வைத்து அதன் மேல் ஓட்டை உடைத்து உள்ளே உள்ள பகுதியை எடுத்து கொள்ளவும்.
இறாலை உதிர்ந்து அதனுடன் வற்றல் தூள், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீரில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முருங்கை இலை,கடுகு, சீரகம், மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
சிங்கி இறாலையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். இப்போது சுவையான சிங்கி இறால் தயார்.






