- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
சிக்கன் வைத்து என்னதான் நாம் நிறைய உணவுகள் செய்தாலும் சலித்து போகாத அளவிற்கு சிக்கன் சாப்பிடக்கூடிய சிக்கன் பெரியவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் சிக்கன் வைத்து நாம் நிறைய உணவுகளை செய்யலாம். சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரைட் ரைஸ், சிக்கன் கொத்து புரோட்டா, சிக்கன் முட்டை பரோட்டா, சிக்கன் கிரேவி, சிக்கன் மிளகு வறுவல், சிக்கன் 65 என்ற சிக்கன் வைத்து செய்யக்கூடிய உணவுகளை சொல்லிக்கொண்டே போகலாம். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்குமே பிடித்த அசைவம் என்றால் அது சிக்கன் தான்.
சிக்கனில் இருக்கக்கூடிய சிக்கன் விங்க்ஸ் சிக்கன் லெக் பீஸ் என அனைத்தையுமே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த சிக்கனை வைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான புதினா மிளகு கோழி வறுவல் எப்படி செய்வது என்று இப்பொழுது பார்க்கப் போகிறோம். இதனை தயிர் சாதம் லெமன் சாதம் வெஜிடபிள் பிரியாணி சிக்கன் பிரியாணி இறால் பிரியாணி குஸ்கா புலாவ் என்று அனைத்திற்குமே சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிடும் பொழுது சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
எப்பொழுதுமே ஒரே மாதிரியாக சிக்கன் வறுவல் செய்து சலித்து போயிருந்தால் கண்டிப்பாக வறுத்து அரைக்கக்கூடிய மசாலாவில் செய்யக்கூடிய இந்த சூப்பரான புதினா மிளகு கோழி வறுவல் ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அதன் பிறகு அடிக்கடி செய்வீர்கள். வீட்டில் உள்ள அனைவருக்கும் இது மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபியாக மாறிவிடும். இதில் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்ப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எனவே நிச்சயமாக உங்கள் வீட்டில் ஒரு முறை இந்த ரெசிபியை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் இப்பொழுது வாருங்கள் இந்த புதினா மிளகு கோழி வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சிக்கன் மிளகு கறி இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் இஞ்சி பூண்டு பட்டை கிராம்பு ,1 பெரிய வெங்காயம்,தயிர் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் மல்லி விதைகள் சீரகம் மிளகு, சோம்பு காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆற வைத்து பொடியாக்கி கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து பிரியாணி இலை ஒரு டீஸ்பூன் சோம்பு, பெரிய வெங்காயம் பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
பிறகு தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும். கலந்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக கிளறிய பிறகு அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு சுருள சுருள வதக்கி இறக்கினால் சுவையான புதினா கோழி மிளகு வறுவல் தயார்.






