மேஷம்

மேஷம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் தடைப்பட்ட திருமணங்களை நடத்தி வைப்பார். வியாபாரிகள் திட்டமிட்ட தொழில் விரிவாக்கம் செய்யலாம். அரசு துறை உத்தியோகஸ்தர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் வழக்கத்தைவிட கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். எதிர்பாராத வரவுகளால் பொருளாதாரம் உயரும். பழைய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கல்களின் சிரமம் குறையும். பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும். பிறரை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ரிஷபம்

ரிஷபம் ராசியினருக்கு இவ்வாரம் மனதில் நினைத்த விஷயங்கள் கைகூடும். சந்திரன் சமூகத்தில் நல்ல மதிப்பை ஏற்படுத்தித் தருவார். தொழில் முனைவோர் புதிய முன்னேற்ற பாதையில் செல்வார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை மட்டுமே செய்து வரவேண்டும். முதலீடு செய்வதில் கவனம் தேவை. மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவர். ஆன்மிக பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. சுப காரியத் தடைகள் விலகும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். கணவன்-மனைவி உறவுகளில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையோடு செல்ல வேண்டும். சிலருக்கு வருமானத்தை விட சற்று கூடுதலாக செலவு ஆகும்.
மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத முன்னேற்றம் உண்டு. குருவும், புதனும் பல வெற்றிகளை தருவார்கள். வியாபாரிகள் தொழில் விரிவாக்கம் செய்யலாம். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த சிக்கல்கள் விலகப்பெறுவர். மாணவர்கள் கல்வி, விளையாட்டில் சாதனை செய்து, நற்பெயர் பெறுவர். கணவன் மனைவி உறவுகள் அன்னியோன்யமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனை ஒன்று சுமுகமாகத் தீரும். தந்தையின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படலாம். தகவல் தொடர்புகளில் கவனமும் சரியான வார்த்தையாடலும் தேவை.
கடகம்

கடகம் ராசியினருக்கு இந்த வாரம் தடை கடந்து வெற்றி பெறுவர். சனியும், சுக்கிரனும் சுப காரியங்களில் ஈடுபடச் செய்வார்கள். வியாபாரிகளுக்கு தொழில் விருத்தி உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவார்கள். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள். சிலர் வீடுகளை புதுப்பிக்கலாம். மனதில் உற்சாகம் இருக்கும். பொருளாதாரம் சீராக இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு அகலும். சிலருக்கு ஆரோக்கிய பிரச்னைகள் ஏற்படலாம். பேச்சில் மிகுந்த கவனம் தேவை. பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலைச்சல் அதிகரிக்கும்.
சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு இந்த வாரம் தடைபட்ட நல்ல விஷயங்கள் நடந்தேறும். குருவும், புதனும் உங்கள் அறிவுத்திறனை மேம்படுத்துவார்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயம் அடைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் ஏற்படும். மாணவர்கள் தொழிற்கல்வி, கணினி பயிற்சி பெறுவார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். வீடு – மனை வாங்கும் யோகம் உண்டு. செலவுகள் நல்லபடியாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பதவி மாற்றங்களும் இடமாற்றங்களும் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ள சிலருக்கு மேலதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்படலாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் நண்பர்கள் மூலம் நன்மை ஏற்படும். சனி தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தினாலும் ஆதாயமும் உண்டு. உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்க பெறுவர். மாணவர்கள் அறிவுத்திறன் சாரந்த போட்டிகளில் வெற்றி பெறுவர். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். கோயில் தரிசனம் கிடைக்கும். முக்கியமானவர்கள் உதவுவார்கள். பெரியோர்களின் ஆசிர்வாதம் உண்டு. எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முயற்சிகள் பலனளிக்கும். தாய்வழி சொந்தங்களோடு மனஸ்தாபம் ஏற்படலாம். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதும் நல்லது.
துலாம்

துலாம் ராசியினருக்கு இது இனிய வாரம். சுக்கிரன் எதிர்பாலின நண்பர்களின் ஆதரவை பெற்று தருவார். தொழில் துறையினர் புதிய தொழில் முயற்சிகளை தொடங்கலாம். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவை பெற்று நன்மை அடைவர். மாணவர்கள் தேர்வு, விளயாட்டுகளில் உற்சாகமாக ஈடுபடுவர். முக்கிய நபர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுபகாரியத் தடை நீங்கி வீட்டில் சந்தோஷத்தை ஏற்படுத்தும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை. மேலதிகாரிகள் உங்கள் மீது குற்றம் சுமத்தும் வாய்ப்பு உள்ளது அதனால் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்

விருச்சிகம் ராசியினருக்கு இந்த வாரம் பழைய நண்பர்களை சந்திப்பார்கள். சனியும், குருவும் வருமானத்தை பெருக்குவார்கள். தொழில்துறையினருக்கு ஆதாயமான காலகட்டம். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் பெறுவார்கள். மாணவர்கள் தேர்வு, விளையாட்டு ஆகியவற்றில் நல்ல தேர்ச்சி பெறுவர். அரசாங்க அனுகூலம் உண்டு. வேலை தேடும் முயற்சி பலன் அளிக்கும். சிலருக்கு புதிய நல்ல உத்தியோகம் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. கொடுக்கல் வாங்கல்கள் சீராக இருக்கும். சிலருக்கு எப்போதோ செய்த தவறுகளால் இப்பொழுது மனம் வருந்தும் படி நேரலாம். பேச்சில் கவனமாக இருக்கவும்.
தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் பண வரவு உண்டு. ராசியதிபதி குரு புதிய மனிதர்கள் தொடர்பை ஏற்படுத்தி நன்மை தருவார். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபமும் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு பெறுவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் சாதனைகள் செய்வர். தடைபட்டிருந்த காரியங்கள் வேகம் நடக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த வேலைவாய்ப்புகள் கிடைக்கும். திடீர் செலவும், எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவியிடையே சில குழப்பங்களும் நெருடல்களும் ஏற்படலாம். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
மகரம்

மகரம் ராசியினருக்கு புதிய செய்திகளால் நம்பிக்கை உருவாகும். சுக்கிரன் எதிர்பாராத தன வரவை தருவார். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் வழக்கத்தை விட கவனமாக இருக்க வேண்டும். பங்கு மூலம் ஆதாயம் உண்டு. மாணவர்கள் விளையாட்டு, கல்வி இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும். சொந்த பந்தங்களின் திருமண நிகழ்ச்சிகள் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சகோதர உறவுகள் மேம்படும். வீடு கட்டுவதில் இருந்த சிரமம் குறையும். சிலர் புதிய வீடு வாங்கலாம். சிலருக்கு ஏற்கனவே உள்ள நோய்கள் தொல்லை கொடுக்கும். பிரயாணங்களில் கவனம் தேவை.
கும்பம்

கும்பம் ராசியினருக்கு முன்னேற்றமான வாரம். செவ்வாய் எளிதாக மனதை உணர்ச்சி வசப்படச் செய்வார். வியாபாரிகளுக்கு வர்த்தகம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மூலம் கல்வி மேன்மை அடைவர். திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். வெகு நாட்களாக தடைப்பட்டிருந்த சில காரியங்கள் திருப்தியாக நடக்கும். சில நேரங்களில் பண நெருக்கடிகள் ஏற்படும். கடன் கொடுத்தவர்கள் கெடுபிடி செய்வார்கள்.
மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் திட்டமிட்ட விஷயங்கள் நடக்கும். சந்திரன் சஞ்சாரம் காரணமாக பிரயாணங்கள் நன்மை உண்டு. உத்தியோகஸ்தர்கள் புதிய விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்கள் பொறியியல், கணினி பாடங்களை உற்சாகமாக படிப்பார்கள். கஷ்டங்களில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்ற தெளிவு பிறக்கும். சகோதர உறவுகள் நல்லபடியாக உதவும். கடன் சுமை குறையும். ஊர் மாற்றம் விரும்பியபடி இருக்கும். சிலருக்கு தேவையில்லாத செலவுகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். கவனச் சிதறலால், மனம் கலக்கத்திற்கு ஆளாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளுக்குமான சூரிய பெயர்ச்சி பலன்கள்!!


