மேஷம்

இந்த வாரம் தொழில் போட்டிகளை சாமர்த்தியமாக சமாளித்தாலும் வாரக் கடைசியில் சில சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். வெளியூர் பயணங்கள் நல்ல பலனை கொண்டு வரும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் பகையை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வீர்கள்.சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான பதிலை பெறுவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
ரிஷபம்

இந்த வாரம் பிள்ளைகளால் சில பிரச்சனைகளை சந்தித்து மன அமைதியை இழப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் வார இறுதியில் பிரச்சனைக்கு சரியான தீர்வு கிடைக்கும். புதிய முதலீடுகளை எச்சரிக்கையாக செய்யுங்கள். நம்பிக்கையான நபராக இருந்தாலும் பண விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். சிலருக்கு இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க நேரும். சிறு சிறு ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம்.
மிதுனம்

இந்த வாரம் உறவினர்களின் தேவையை பூர்த்தி செய்ய கைக்காசை செலவு செய்வீர்கள். வீட்டை புதுப்பிக்க வங்கியில் கடன் பெறுவீர்கள். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இடத்தில் கவனமாக இல்லையென்றால் பணி இழப்பு ஏற்படும். சிலருக்கு வேலை உயர்வு கிடைக்கலாம். வழக்குகளைப் பொறுத்த வரை உங்களுக்குச் சாதகமான நிலையே இருக்கும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். சக ஊழியர்களுடன் எச்சரிக்கையாகப் பழகவும்.
கடகம்

இந்த வாரம் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகளை நன்கு ஆராய்ந்து செயல்படுத்துவது நல்லது. ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு செலவுகள் அதிகரிப்பதால் மன அமைதி குறையும்.
சிம்மம்

இந்த வாரம் தொழிலுக்காக நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகு காரியங்கள் நிறைவேறும். நம்பி பணம் கொடுத்தவர்கள் நம்பிக்கை மோசம் செய்யக்கூடிய நிலை உருவாகும். அண்ணன் தம்பிகளுக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி

இந்த வாரம் தகப்பனார் வழியில் மருத்துவச் செலவுகள் வரலாம். நீங்கள் எதிர்பார்த்த காரியம் நண்பர்கள் மூலமாக நிறைவேறும். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவதற்காக புத்திசாலித்தனமாக நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பச் செலவுக்காக கடன் வாங்க வேண்டிய நிலை உண்டாகும். பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகக் கொஞ்சம் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும்.
துலாம்

இந்த வாரம் வருமானம் பெருகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். வியாபாரத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. அரசாங்க ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய வீட்டை புதுப்பித்து அலங்காரம் செய்வீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய வீடு கட்டுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக கடன் வாங்குவீர்கள். உடல் நலனில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு உரிய சிகிச்சையினால் உடனுக்குடன் சரியாகும்.
விருச்சிகம்

இந்த வாரம் புதிய தொழில்களில் முனைப்பு காட்டலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை அதிகரிக்கலாம். கூட்டுத்தொழில் அமோக லாபம் தரும். வியாபாரிகளுக்கு தடையில்லாமல் வருமானம் கிடைக்கும். இந்த வாரம் ஆலய தரிசனம் செய்வீர்கள். வேறு வேலைக்கு அல்லது வேறு இடத்துக்கு மாற நினைப்பர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். பணம் கடன் வாங்குவதையோ கொடுப்பதையோ இந்த வாரம் தவிர்க்கவும்.
தனுசு

இந்த வாரம் போட்டி பந்தயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தினரின் சந்தோஷத்திற்காக இரவு பகலாக உழைப்பீர்கள். துணிச்சலோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக விட்டுக்கொடுத்து போவீர்கள். எதிர்பார்த்ததை விடவும் கூடுதலான பணவரவு இருக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.
மகரம்

இந்த வாரம் எடுத்த காரியங்களை எந்தவித சிரமமும் இல்லாமல் நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் செய்யும் நல்ல காரியங்களால் உறவினர்களும் நண்பர்களும் பாராட்டுவார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டகாலமாக தொடர்பில் இல்லாமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இந்த வாரம் பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும்.
கும்பம்

இந்த வாரம் வீணான விவகாரங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே பழக்க வழக்கங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். பழைய வாகனங்களை பழுது பார்ப்பீர்கள். வீட்டை புதுப்பித்து அழகு பார்ப்பீர்கள். தொழிலில் முன்னேற்றமான பலனைப் பெறுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் வரக்கூடும் என்பதால், ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். சிறிய அளவில் உடல்நலன் பாதிக்கப்பட்டு சரியாகும்.
மீனம்

இந்த வாரம் வியாபாரம் வெற்றிகரமாக நடந்து லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாக நடக்கும். எதிர்ப்புகளை மீறி நினைத்ததை சாதிப்பீர்கள். அரசு ஊழியர்கள் அக்கறையுடன் வேலை பார்க்க வேண்டும். சிலருக்கு வேலை மாறுதல் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தேடியவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். புதிய ஆர்டர்களை பெறுவதில் வெற்றியடைவீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சிகளில் பொறுமை அவசியம்.
இதனையும் படியுங்கள் : மீனத்தில் சனி ராகு சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் வெற்றிகளை பெறப்போகும் ராசிகள்!


