மேஷம்
வியாபாரிகள் விவசாய விளைபொருட்கள் மூலம் ஆதாயம் அடைவர். சிலரின் தவறான வழிகாட்டுதலைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிட மாற்றமும், கூடுதல் பொறுப்புகளும் அளிக்கப்படும். ரியல் எஸ்டேட் துறையினர் புதிய திட்டங்களை தொடங்கி அனுகூலம் பெறலாம். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.
ரிஷபம்
வியாபாரிகள் கடன் தருவது மற்றும் வாங்குவது ஆகிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக பொறுப்புகள் அதிகரிக்கும். காய்ச்சல், தலை சுற்றல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையால் சரியாகும். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும், தொழில் வியாபாரத்தில் இருந்த தடை விலகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசு வழி முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வியாபாரி கணக்கு வழக்கில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
தொழில் துறையினருக்கு திடீரென நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகள் புதிய இடங்களில் தொழில் கிளைகளை அமைக்கும் சூழல் உருவாகும். உத்தியோகஸ்தர்கள் உற்சாகமாக தங்கள் பணிகளை மேற்கொள்வார்கள். மன அழுத்தம் காரணமாக தூக்கம் வருவதில் சிரமங்கள் ஏற்பட்டு விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பின் விளைவு பற்றி யோசிக்காமல் எந்தவொரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.
கடகம்
தடைபட்ட சுப காரியங்கள் நடைபெறும். எதிர்பார்த்த நன்மைகள் வந்து சேரும். தொழில்துறையினர் எதிர்பாராத சிக்கல்களை சந்தித்து அதிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரிகள் நேரடி போட்டியாளர்களை சந்திப்பதால் வர்த்தகம் பெருக புதிய யுக்திகளை கையாள வேண்டும். உங்கள் செல்வாக்கு உயரும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடை விலகும்.
சிம்மம்
மனதில் தெளிவு ஏற்பட்டு சுறுசுறுப்பாக செயல்படும் காலகட்டம் இது. குடும்பத்தில் தடைபட்ட சுப காரியங்கள் இனிமையாக நடக்கும். தொழில் துறையினருக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். ஜலதோஷம், காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவ செலவு அதிகரிக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள். பணத்தேவை பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சட்ட முயற்சி சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
கன்னி
அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது. நீங்கள் செய்யும் ஒரு தவறுகளையும் உங்கள் எதிரிகள் கவனித்து நெருக்கடியை உண்டாக்குவர். பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கக்கூடிய காலகட்டம் இது. வியாபாரிகள் பல தடைகளை சந்தித்து பின் ஆதாயம் பெறுவார்கள். வியாபாரிகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட குறைகளை தீர்த்து வைக்க வேண்டும். உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது.
துலாம்
குடும்பத்தில் நிம்மதியும், பண வரவும் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். தொழில்துறையினர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். தடைபட்ட முயற்சி நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். புதிய முயற்சி வெற்றியாகும். உறவினர் ஆதரவால் வேலை நடந்தேறும். பொருளாதார நிலை சீராகும். பொன் பொருள் சேரும். உடல்நிலையிலும், செல்வாக்கிலும் கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிகம்
செலவினங்கள் அதிகமாகும் காலகட்டம் இது. தொழில் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரிகள் எதிர்பார்த்த லாபம் பெறுவர். பண விவகாரங்களில் கவனமாக இருப்பதும், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும் நல்லது. லாப செவ்வாயால் வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். எதிர்ப்பு விலகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும்.
தனுசு
பல தடை தாமதங்களுக்கு பிறகு முயற்சிகள் வெற்றி அடையும். குடும்பத்தில் உற்சாகம் இருந்தாலும் சில வாக்குவாதங்கள் உருவாகி அகலும். தொழில் துறையினருக்கு பண புழக்கம் அதிகரிக்கும். செயல்களில் வேகம் இருக்கும். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் இருந்த தடை விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
மகரம்
பயணங்கள் மூலம் காரிய வெற்றி அடையும் காலகட்டம் இது. குடும்பத்தில் பொருளாதார வரவு தடை தாமதங்களுக்கு பிறகு ஏற்படும். தொழில்துறையினருக்கு செலவினங்கள் அதிகரிக்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தெய்வ அருள் உண்டாகும் செல்வாக்கு அதிகரிக்கும். தொழிலில் கூடுதல் கவனம் தேவை. புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும். அரசியல் வாதிகளுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
கும்பம்
செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி இருக்கும். தொழில்துறையினர் எதிர்பார்த்த ஆதாயங்களை அடைவதில் தடை தாமதம் உண்டு. வெளியூர் பயணம் ஆதாயம் தரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ஒரு சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். சுய தொழில் முன்னேற்றமடையும். முயற்சி வெற்றியாகும்.
மீனம்
பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து நன்மைகளை பெற வேண்டும். குடும்பத்தில் வரவும், செலவும் சரியாக இருக்கும். தொழில்துறையினர் புதிய கடன்களை வாங்குவதை இந்த வாரம் தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். ஆரோக்யத்தில் சில சங்கடம் தோன்றும். விழிப்புணர்வு தேவை. கூட்டுத் தொழிலில் சங்கடம் தோன்றும்.
இதனையும் படியுங்கள் : இன்றைய ராசிபலன் – 03 நவம்பர் 2024!