மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த வாரம் மனதில் குழப்பம் அகன்று தெளிவு பிறக்கும். புதிய தொடர்புகள், வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரியின் பாராட்டு பெறுவார்கள். மாணவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான வழிகாட்டுதல் கிடைக்க பெறுவர். வங்கித்துறையில் உள்ளவர்கள் முன்னேற்றம் பெறுவார்கள். பதவி உயர்வால் சிலருக்கு இட மாற்றங்கள் நிகழும். உயர் அதிகாரிகள் பாராட்டு கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்கள் பிரச்னையின்றி இருக்கும். மற்றவர்களிடம் அபிப்பிராயங்களை சொல்லும் போது கட்டுப்பாட்டோடு இருங்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்

இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு சுபகாரிய தடை உருவாகி விலகும். சிலருக்கு சொந்த வீடு மனை அமையும் யோகம் உருவாகும். பழைய கடன்கள் தீரும். உத்தியோகஸ்தர்கள் பணி சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை மனதில் சலிப்பின்றி கற்க வேண்டும். மாணவர்கள் கல்வி, எதிர்கால முன்னேற்றத்திற்கான புதுப்புது விஷயங்களை அறிந்து கொள்வர். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. போட்டித் தேர்வில் வெற்றி கிடைக்கும். வேலை முயற்சிகள் வெற்றி பெறும் சாதகமான அமைப்பு உண்டு. பொருளாதாரத்தில் குறைவு இருக்காது. ஆனால் அதே சமயம் வரவுக்கேற்ற செலவும் முன்னால் வந்து நிற்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. வீண் விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்

மிதுனம் ராசியினருக்கு இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. குடும்பத்தில் எதிர்பார்த்த சுப நிகழ்ச்சிகள் நல்ல விதமாக நடக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து ஆதாயம் பெறுவார்கள். மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் திறமை காட்டி கல்வி நிறுவனங்களுக்கு பெருமை சேர்ப்பர். உடன்பிறப்புக்கள் உதவும் வாய்ப்பு உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் வீடு தேடி வரலாம். மற்றவர்களுடன் பேசும் போது எச்சரிக்கையுடன் பேசவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும். இந்த வாரம் கொஞ்சம் இறுக்கிப் பிடித்துச் செலவு செய்வது முக்கியம். வீடுமாற்றம், இடமாற்றம் வரலாம். சிலருக்கு எதிர்பாராத சில சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். சில நல்ல சந்தர்ப்பங்களை அஜாக்கிரதையால் இழக்க நேரிடலாம்.
கடகம்

கடகம் ராசியினருக்கு இது வெற்றிகரமான வாரம். கடந்த காலங்களில் கடைப்பிடித்த பொறுமைக்கு ஏற்ற பலன் கை மேல் வந்து சேரும் சமயம் இது. வியாபாரிகள் இனிமேல் முன்னேற்றம் பெறுவர். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பணி உயர்வு, ஊதிய உயர்வுகளை பெற்று உற்சாகம் அடைவர். மாணவர்கள் நண்பர்களோடு உற்சாகமாக சுற்றுலா பயணம் சென்று மகிழ்வார்கள். வீடு மனை வாங்குவது முதலிய முயற்சிகள் வெற்றி பெறுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவதில் பணம் செலவழிப்பீர்கள். பயணங்கள் அதிகரிக்கும். நலன் குறித்த சிந்தனைகள் மேலோங்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத செலவுகள் சில ஏற்படலாம். கணவன் மனைவிஇடையே கருத்து வேறுபாடுகள் மறையும்.
சிம்மம்

சிம்மம் ராசியினர் இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வாகன யோகம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் தாங்களே களத்தில் இறங்கி செயல்படுவது தான் நல்லது. மாணவர்கள் உற்சாகமாக இருந்தாலும் பாடங்களிலும் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய காலம் இது. கலைஞர்களுக்கு லாபம் வரும். அண்ணன் தம்பி உறவு முறைகள் சுமுகமாகும். புதிய நகைகளை வாங்கும் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனம் தேவை. கணவன் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங் களில் ஈடுபடவேண்டாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த தன வரவு கைகளில் வந்து சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு புதிய நண்பர்களால் படிப்பில் பல நன்மைகள் ஏற்படும். கலைஞர்களுக்கு ஆதாயமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொது வாழ்வு மகிழ்ச்சி அளிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வாய்ப்பு உண்டு. பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் போன்ற நெருக்கடிகள் ஏற்படலாம். பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி கிடைக்கும். சிலருக்கு தூக்கத்தில் குறைபாடுகள் ஏற்படலாம். கவலைகள் வந்து தூக்கத்தைக் கெடுக்கலாம்.
துலாம்

துலாம் ராசியினர் இந்த வாரம் நல்ல சுப காரியங்களில் கலந்து கொள்வர். வெளிநாட்டு தொடர்பு அல்லது பயண வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் உயர் அதிகாரிகள் ஆதரவால் மனதிற்கினிய ஆதாயங்களை பெறுவர். மாணவர்கள் விளையாட்டை விட கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முக்கியஸ்தர்களின் நட்புறவு கிடைக்கும். வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மனைவி வழியில் ஆதரவு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியத் தடைகள் நீங்கும். தொழில் சிறப்பாக நடக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கர்ப்பிணிப் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் இவ்வாரம் புதிய முயற்சிகளை தள்ளி வைக்க வேண்டும். பொறுமை கடலினும் பெரிது என்பது இந்த வாரம் தெரிய வரும். உத்தியோகஸ்தர்கள் நிர்வாகத்தின் மூலம் எதிர்பாராத ஆதாயங்களை பெற்று மகிழ்வர். மாணவர்கள் புதிய பொறியியல் தொழில்நுட்பங்களை கற்கும் வாய்ப்பு பெறுவர். தகவல் தொழில் நுட்பத்தில் உள்ளவர்களுக்கு நன்மைகள் அதிகம். அரசாங்க அனுகூலங்கள் உண்டு. விருப்பங்கள் நிறைவேறும். பொருளாதார ஏற்றம் உண்டு, உற்சாகம் குறைவில்லாமல் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வயிறு உபாதைகள் ஏற்படலாம். பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
தனுசு

தனுசு ராசியினர் இந்த வாரம் புதியவர்களுடன் இணைந்து செயல்பட்டு காரிய வெற்றி அடைவர். உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக செயல்பட்டு நிர்வாகத்தின் நன்மதிப்பை பெறுவது எதிர்கால நலனுக்கு ஏற்றது. மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் வெல்லும் ஆலோசனை கிடைக்கப் பெறுவர். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் தெரியும். படிக்கும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெறுவார்கள். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து வில்லங்கங்கள் அகலும். சிலருக்கு உறவினர்களால் கருத்து வேறுபாடுகள் திடீர் செலவுகள் உண்டு. யாருடைய பிரச்னையிலும் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
மகரம்

மகரம் ராசினர் இந்த வாரம் கடவுள் பக்தியோடு காட்சியளிப்பார்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு உண்டு. அதிகார பதவியில் உள்ள உத்தியோகஸ்தர்கள் சிக்கல்களை சந்தித்து வெற்றி பெறுவர். மாணவர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். வீடுமனை வாங்க வேண்டும் என்ற முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். நினைத்த எண்ணங்கள் பூர்த்தியாகும். தடைகள் விலகும். தாமதங்கள் மாறும். தைரியம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. தொழிலில் கவனம் இல்லாவிட்டால் கடன்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
கும்பம்

கும்பம் ராசியினருக்கு இந்த வாரம் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். நீண்ட நாள் குழப்பங்களுக்கு சில தீர்வுகள் ஏற்படும் காலகட்டம் இது. உத்தியோகஸ்தர்கள் பணியிட சிக்கல்கள் விலகுவதால், புதிய பாதையில் பயணம் செய்வர். மாணவர்கள் வெளிநாட்டு கல்வி பெறுவதற்குரிய ஆலோசனை பெறுவர். துணிச்சலோடு காரியங்களைச் செய்வீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள். கணவன், மனைவி உறவுகளில் சிக்கல்கள் குறையும். தொழில் விரிவாக்கத்திற்கு கடன் பெறும் வாய்ப்புண்டு. சிலருக்கு கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு அதனால் நிதானித்து செயல்படவும். விவாதங்கள் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது. பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை.
மீனம்

மீனம் ராசியினருக்கு இந்த வாரம் பெற்றார் உறவினர்களோடு சுமூகமான வரவு செலவு ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள். மாணவர்கள் புதிய கருத்துப்பட்டறைகள், பயிற்சிகளில் பங்கு பெறுவர். உபரி வருமானத்திற்கு வழிகள் கிடைக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும். சிலருக்கு இட மாற்றங்கள் உண்டு. சுபகாரிய முயற்சிகள் சிறிய தடைக்குப் பின் நிறைவேறும். வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். பயணிக்கும் போது நிதானமாக பயணிக்கவும். சிலருக்கு உடல் வலி அசதி சோர்வு அதிகரிக்கும். செரிமானப் பிரச்னைகள் ஏற்படலாம். கணவன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
இதனையும் படியுங்கள் : 12 ராசிகளும் தானம் செய்ய வேண்டிய பொருட்கள்


