- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். ஆனால் உங்களுக்கு மதியம் வித்தியாசமாக என்ன சாதம் செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் பருப்பு இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான தால் கிச்சடி செய்யுங்கள்.
தால் கிச்சடி வட இந்தியாவில் பிரபலமான உணவாகும். இதை நாம் வீட்டிலேயே செய்ய முடியும். இதை செய்வதற்கு பாசுமதி அரிசி மற்றும் பருப்பு இருந்தால் போதும் எளிமையாக செய்து விடலாம். இந்த உணவு உங்கள் நாக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் இதமளிக்கும் அளவிற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். உங்களுக்கு வகை வகையாக உணவு செய்ய நேரம் இல்லாத சமயத்தில் இந்த ஒன் பாட் ரெசிபி சட்டுன்னு செய்து பாருங்கள். இதனுடன் சேர்த்து சாப்பிட ஊறுகாய் அல்லது அப்பளம் மட்டும் இருந்தால் போதும்.
இந்த ரெசிபி குழந்தைகளுக்கு மட்டும் பிடித்ததாக இருக்காது பெரியவர்களுக்கும் நிச்சயமாக பிடிக்கும் அதனால் ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். இந்த தால் கிச்சடி ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் பருப்பு மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது சுவையான இந்த தால் கிச்சடி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு சுட சுட ஒன் பாட் கத்திரிக்காய் சாதம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்கு அலசி சிறிது நேரம் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் கடுகு, சீரகம், நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
அதன்பிறகு ஊற வைத்த அரிசி பருப்பை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு கொத்தமல்லி, கஸ்தூரி மேத்தி, நெய் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான தால் கிச்சடி தயார்.






