- Prep
- 5 min
- Cook
- 10 min
- Total
- 15 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான ஒன் பாட் சீரக சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். சீரகம் உடல் சூட்டைக் குறைக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். இத்தகைய சீரகத்தை அடிக்கடி சமையலில் சேர்ப்பதைத் தவிர, சீரகத்தைக் கொண்டு ரெசிபி செய்து சாப்பிடுவது இன்னும் நல்லது.
உங்களுக்கு மதியம் என்ன சாதம் செய்வதென்று தெரியவில்லையா? காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் வீட்டில் சீரகம் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான சாதம் செய்யுங்கள். இந்த சீரக சாதம் ஒரு ஈஸியான வகையில் செய்து முடிக்கக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி. அதிலும் சீரகம் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ரெசிபியை வீட்டில் செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இந்த சாதத்துடன் உருளைக்கிழங்கு வறுவல், ஏதாவது கிரேவி சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதோடு ஆரோக்கியமானதும் கூட.
உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த சீரக சாதம் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமாக இருக்கும். அடுத்தமுறை உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். அஜூரண பிரச்சனை இருப்பவர்கள், பசி எடுக்காதவர்களுக்கு இந்த சீரக சாதம் செய்து சாப்பிடலாம். குழந்தை பிறந்தவர்களுக்கு மதியம் சூடான இந்த சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து குடுத்தால் நல்லது. இன்று இந்த ஒன் பாட் சீரக சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : திணை சீரக தோசை காலை டிபனுக்கு இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
Ingredients
Method
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய் , அன்னாசி பூ, சீரகம், முந்திரி பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின் ஊற வைத்த அரிசி சேர்த்து கலந்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் சீரக சாதம் தயார்.






