- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு.
அசைவம் சாப்பிடாத, சைவ பிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே காளான் பிரியாணி ஆகும். பிரியாணியில் பல வகைகள் இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரியாணி பிடிக்கும். அனைத்து வகை பிரியாணியை விட காளான் பிரியாணி மிகவும் சுவையானதாக இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். பொதுவாக அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருள். ஏனெனில் காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது. அத்தகைய காளானைக் கொண்டு எப்போதும் கிரேவி செய்வதற்கு பதிலாக, அதைக் கொண்டு பிரியாணி செய்து சாப்பிடுங்கள்.
இதனையும் படியுங்கள் : பாரம்பரிய ருசியில் சூப்பரான காளான் வெள்ளை குழம்பு இப்படி ஒரு தரம் ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் காளானை நன்கு கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் ஏலக்காய், பட்டை, கிராம்பு சேர்த்து பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய மல்லி, புதினா, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தனியா தூள், காஷ்மீர் மிளகாய் தூள், பிரியாணி தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தயிர் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து, அதனுடன் அரிசி, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு, நெய், கொத்தமல்லி, புதினா சேர்த்து கலந்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நெய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் காளான் சாதம் தயார்.






