- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் கீரை ரெசிபியை செய்யுங்கள். அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று கடையமல், பொரியல் என்று செய்யாமல் வித்தியாசமாக ஒன் பாட் பாசலக்கீரை புலாவ் செய்யுங்கள். குறிப்பாக பசலைக்கீரையைக் கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி கீரையை புலாவ் செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஒரே ஒருமுறை கீரை புலாவ் செய்தால், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம். இந்த கீரையில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
ஃபோலேட் அதிகம் உள்ள பசலைக்கீரையை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், இதயத்தை நன்கு ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் இவ்வளவு ஆரோக்கியம் நிறைந்த பசலைக்கீரையில் புலாவ் செய்து கொடுத்து விடுங்கள். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி.
உங்க குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இப்போது சுவையான பசலைக்கீரை புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : இனி ருசியான பாலக் கீரை சட்னி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் கூட தேவைப்படாது இந்து ஒரு சட்னி போதும்!
Ingredients
Method
முதலில் கீரையை நன்கு அலசி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும். பாசுமதி அரிசியை அலசி விட்டு, 10 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ, சீரகம் சேர்க்கவும்.
பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு கீரையை சேர்த்து நன்கு வதக்கவும். பின் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கலந்து, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விடவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் விட்டு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன் பாட் பாசலக்கீரை புலாவ் தயார்.






