- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் உடல் சூட்டைத் தணிக்கும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த ஒன் பாட் பால்க் வெஜிடபிள் புலாவ் ரெசிபியை செய்யுங்கள். பலாக் கீரையைக் கொண்டு புலாவ் செய்யும் போது, அந்த ரெசிபி ருசியாக இருப்பதோடு, சத்தானதாகவும் இருக்கும்.
முக்கியமாக இப்படி கீரையை புலாவ் செய்தால், கீரை பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரே ஒருமுறை கீரை புலாவ் செய்தால், நிச்சயம் அடிக்கடி செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள் அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. குறைந்த கலோரி பசலைக்கீரையில் கலோரி மற்றும் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், இதனை உணவில் தினமும் சேர்த்தால், நிச்சயம் உடல் எடையைக் குறைக்கலாம்.
உங்கள் குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா கலவை சாதம் மாதிரி ஏதாவது செஞ்சி கொடுக்கனும் நினைத்தால் பாலக் கீரையில் பாலக் வெஜிடபிள் புலாவ் செய்து கொடுத்து விடுங்கள். எப்பவும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியா தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம் அதற்கு இது தான் சரியான ரெசிபி. இது ஒரு கலவை சாதமாக இருந்தாலும், மற்ற சாதத்தை விட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் மணமணக்கும் ஒன் பாட் பால்க் வெஜிடபிள் புலாவ் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
இதனையும் படியுங்கள் : புதுவிதமான பாலக் சட்னியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசி பூ சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளி மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன்பிறகு ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து சிறிதளவு நெய் விட்டு நன்கு கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான ஒன் பாட் பால்க் புலாவ் தயார்.






