காரசாரமான ருசியில் சூப்பரான சின்ன வெங்காய கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

இன்று நாம் சின்ன வெங்காயத்தை வைத்து வித்தியாசமான மற்றும் சுவையான வெங்காய கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த சின்ன வெங்காய கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த கிரேவியை வைத்து பாருங்கள். சின்ன வெங்காயம் எனப்படுகிற சாம்பார் வெங்காயம், நம் உடலுக்கு தேவையான ஒரு முக்கிய உணவுப் பொருள். சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.

-விளம்பரம்-

வைட்டமின் சி, வைட்டமின் கே, தியாமின், நியாசின், ஃபோலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களுடன் நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவற்றை குணப்படுத்தும். சின்ன வெங்காயம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சின்ன வெங்காயத்தை சாம்பாரில் இணைத்துச் சாப்பிடுவது, பச்சையாக சாப்பிடுவது என பயன்படுத்துவோம். அதேபோல சின்ன வெங்காயம் கிரேவி வைத்துப் பாருங்கள்! இதன் நன்மைகளும் அதிகம்; டேஸ்டியாகவும் இருக்கும். இந்த சின்ன வெங்காய கிரேவி சாப்பிட்டால் அது அரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் இன்று சின்ன வெங்காய கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
3.75 from 4 votes

சின்ன வெங்காய கிரேவி | Onion Gravy Recipe In Tamil

இன்று நாம் சின்ன வெங்காயத்தை வைத்து வித்தியாசமான மற்றும் சுவையான வெங்காய கிரேவி எப்படி செய்யலாம் என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த சின்ன வெங்காய கிரேவியை இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் சாதத்துடன் தொட்டு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுடைய வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை என்றாலும், பரவாயில்லை. பத்து பதினைந்து பல் சின்ன வெங்காயத்தை வைத்து இந்த கிரேவியை வைத்து பாருங்கள். சின்ன வெங்காயத்தை சாம்பாரில் இணைத்துச் சாப்பிடுவது, பச்சையாக சாப்பிடுவது என பயன்படுத்துவோம். அதேபோல சின்ன வெங்காயம் கிரேவி வைத்துப் பாருங்கள்! இதன் நன்மைகளும் அதிகம்; டேஸ்டியாகவும் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Onion Gravy
Yield: 4 People
Calories: 44kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • கடலை எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சின்ன வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு அலசி விட்டு நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • இஞ்சி பூண்டு வாசனை போனதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு கருவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய கிரேவி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 44kcal | Carbohydrates: 11g | Protein: 6g | Fat: 1.5g | Sodium: 5mg | Potassium: 190mg | Fiber: 1.9g | Vitamin A: 3IU | Vitamin C: 118mg | Calcium: 34mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : தெலுங்கான ஸ்டைல் வெங்காயம் தக்காளி இல்லாமல் கத்திரிக்காய் மசாலா இப்படி செய்து பாருங்க ரொம்ப அற்புதமாக இருக்கும்!