Advertisement
சைவம்

நாவில் எச்சில் ஊற வைக்கும் வெங்காய கொஸ்து ரெசிபியை இதுவரைக்கும் யாருமே டேஸ்ட் பண்ணி இருக்க மாட்டீங்க. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க!!!

Advertisement

இட்லி தோசைக்கு நாம் பெரும்பாலும் சட்னி சாம்பார், துவையல் இவைகளைத்தான் சைடிஷ் ஆக வைத்து சாப்பிடுவோம். இன்று கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரான வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த வெங்காய கோஸ்ட் பொதுவாக சிதம்பரத்தில் தான் மிகவும் ஃபேமஸான ஒரு உணவு.

 இந்த சிதம்பர பேமஸான உணவை உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள் அனைவருக்கும் இந்த வெங்காய கொஸ்து மிகவும் பிடிக்கும். வெங்காயம் கொஞ்சம் அதிகமாக போட்டு வறுத்து அரைத்த மசாலாவில் செய்யப் போகும் இந்த வெங்காய கொஸ்து மிகவும் வாசனையாக,ருசியாக, அட்டகாசமாக இருக்கும்.

Advertisement

குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்து இருக்கும். எனவே சாப்பிடவும் மிகவும் அடம் பிடிப்பார்கள் அந்த மாதிரியான குழந்தைகளுக்கு இந்த வெங்காய கொஸ்து செய்து கொடுத்தால் ஒரு இட்லி ஒரு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

வெங்காய கொஸ்து | Onion Kothsu Recipe In Tamil

Print Recipe
குழந்தைகளுக்கு எப்பொழுதும் ஒரே மாதிரியான சைடிஷ் கொடுத்து அவர்களுக்கு போர் அடித்து இருக்கும். கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசைக்கு ஏற்ற ஒரு சூப்பரானவெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம்.எனவே சாப்பிடவும் மிகவும் அடம் பிடிப்பார்கள் அந்த மாதிரியான குழந்தைகளுக்கு இந்த
Advertisement
வெங்காய கொஸ்து செய்து கொடுத்தால் ஒரு இட்லி ஒரு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும் இந்த வெங்காய கொஸ்து எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Onion Kothu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 217

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • எலுமிச்சை பழ அளவு புளி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 7 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் தனியா விதைகள்
  • சிறிய துண்டு பெருங்காயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • 5 காய்ந்தமிளகாய், கடலைப்பருப்பு தனியா விதைகள், பெருங்காயம் அனைத்தையும் ஒரு கடாயில் போட்டுவறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன்வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  •  
    புளியை நன்றாக கரைத்து வடிகட்டி அதில் சேர்த்துக் கொள்ளவும். புளிக்கரைசல் சேர்த்த பிறகு அனைத்தும்சேர்ந்து நன்றாக வெந்தவுடன் வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கொள்ளவும்.
  • அதன் பிறகுஒரு பத்து நிமிடங்கள் நன்றாக கொதித்த உடன் அடுப்பை அணைத்து விட்டால் சுவையான வெங்காய கொஸ்து தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Cholesterol: 10mg | Sodium: 25mg | Potassium: 284mg | Fiber: 9g

இதையும் படியுங்கள் : ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

3 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

13 மணி நேரங்கள் ago

வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு எளிமையான பரிகாரம்

இந்த உலகில் உள்ள அனைவரும் நேர்மையாக வேலை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று அனைவரிடமிருந்தும் பாராட்டுக்களை…

14 மணி நேரங்கள் ago

மலாய் கோஃப்தா  ஒரு முறை இப்படி ட்ரை பன்னி பாருங்க சட்டி நிறைய செய்தாலும் காலியாகும்!

சப்பாத்தி என்றாலே அதற்கு சைட் டிஷ் ஆக குருமா தக்காளி சட்னி போன்றவை தான் அதிகமாக செய்வோம். அதையும் தவிர்த்து…

15 மணி நேரங்கள் ago

கொய்யாப்பழ ரோஸ் மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்து! இனி அடிக்கடி இந்த சுவையான மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் பள்ளி முடிந்து வரும் போது, அவர்களுக்கு சத்தான, சுவையான மற்றும் வயிறு நிரம்பும்படியான ரெசிபியை…

18 மணி நேரங்கள் ago