- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக வெங்காயம் மற்றும் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்ய உள்ளோம். இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். வெங்காய சப்பாத்தி என்றதும் பலர் அதனை நினைத்து முகம் சுளிக்கலாம். ஆனால் இந்த வெங்காயத்தை வதக்கி செய்வதால் வாசனை அதிகம் வராது. இப்போது சுவையான வெங்காய மசாலா சப்பாத்தி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட மசாலா பன்னீர் ரெசிபி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் கோதுமை மாவு எடுத்து அதனுடன் உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி இடித்த சீரகம், மல்லி மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து அதனுடன் சீரகத்தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் கடலை மாவு, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.
பின் பிசைந்து வைத்துள்ள மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி, பின் சப்பாத்தி போல் தேய்த்து அதன் நடுவில் இந்த வெங்காய கலவையை வைத்து இரண்டாக மடித்து மீண்டும் தேய்த்துக் கொள்ளவும். இப்படி அனைத்து உருண்டைகளையும் செய்து வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நாம் செய்து வைத்துள்ள சப்பாத்தியை சேர்த்து சுற்றி நெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான வெங்காய மசாலா சப்பாத்தி தயார்.






