வீடே மணக்க மணக்க ருசியான வெங்காய சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

- Advertisement -

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான வெங்காய சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை. என்ன சாதம் செய்வது என்று தெரியவில்லை எனும்போது ரொம்ப ரொம்ப ஈசியாக இந்த வெங்காய சாதத்தை செய்து கொடுங்கள். குழம்பு வைக்க நேரம் இல்லாத போது வெங்காயத்தை வைத்து சுவையான இந்த சாதத்தை செய்துவிட முடியும். குறிப்பாக பேச்சாளராக இருப்பவர்களுக்கு இந்த வெரைட்டி ரைஸ் சாதம் ரொம்ப ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்.

-விளம்பரம்-

வெங்காயத்தில் எக்கச்சக்க ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. ஆனால், அவற்றை நாம் சரிவர உண்பதில்லை. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் இந்த சாதம் இருக்கும். இதன் சுவை அனைவருக்கும் விருப்பமானதாகவே இருக்கும். இதனை செய்வது மிகவும் சுலபமான விஷயம்தான். வெறும், வெங்காயம் இருந்தால் போதும் உடனே இதனை செய்து விடலாம். இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாருங்கள் இந்த சுவையான வெங்காய சாதம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

வெங்காய சாதம் | Onion Rice Recipe In Tamil

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான வெங்காய சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லை. என்ன சாதம் செய்வது என்று தெரியவில்லை எனும்போது ரொம்ப ரொம்ப ஈசியாக இந்த வெங்காய சாதத்தை செய்து கொடுங்கள். குழம்பு வைக்க நேரம் இல்லாத போது வெங்காயத்தை வைத்து சுவையான இந்த சாதத்தை செய்துவிட முடியும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: onion rice
Yield: 3 People
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 பெரிய வெங்காயம்
  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் வெங்காயத்தை தோல் நீக்கி விட்டு, தண்ணீரில் அலசி நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்து வந்ததும் வேகவைத்த சாதத்தை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெங்காய சாதம்‌ தயார். சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Nutrition

Serving: 250g | Calories: 60kcal | Carbohydrates: 6g | Protein: 12g | Fat: 1.2g | Sodium: 4mg | Potassium: 161mg | Fiber: 3g | Vitamin A: 2IU | Vitamin C: 15mg | Calcium: 52mg | Iron: 2.36mg

இதனையும் படியுங்கள் : தக்காளி தொக்கு சாதம் இனி இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ஒரு பிடி சாதம் கூட மிச்சம் இருக்காது!