- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு எப்பவுமே நம்ம லெமன் சாதம், புளி சாதம், தயிர் சாதம், வெஜிடபிள் பிரியாணி அப்படின்னு இந்த மாதிரி ஒரே மாதிரியான ரெசிபிஸ் தான் செஞ்சு கொடுத்திடுவோம். இப்ப குழந்தைகளுக்கு ஸ்கூல் ஸ்டார்ட் ஆயிடுச்சு அதனால குழந்தைகளுக்கு தினமும் லஞ்ச் பாக்ஸுக்கு என்ன செஞ்சு கொடுத்து விடுகிறது அப்படின்னு குழப்பமா இருந்துச்சுன்னா கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு தடவை சின்ன வெங்காயம் வச்சு வெங்காய தொக்கு சாதம் செஞ்சி கொடுத்து விடுங்க. சின்ன வெங்காயம் சாப்பிடுவது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது.
அசைவம் செய்யும் போது சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சின்ன வெங்காயம் சேர்த்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். அதனால அடிக்கடி சமையல் இந்த சின்ன வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த சின்ன வெங்காயம் வைத்து செய்யக்கூடிய சின்ன வெங்காய தொக்கு சாதம் ரொம்ப ரொம்ப டேஸ்டா இருக்கும். இதுக்கு சைடிஷ் கூட தேவைப்படாது.
இந்த டேஸ்டான சுவையான சாதம் கண்டிப்பாக எல்லாருமே வீட்ல செஞ்சு சாப்பிடணும். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடுங்க. இந்த டேஸ்டான ஆரோக்கியமான சின்ன வெங்காய தொக்கு சாதம் செய்வதற்கு நம்ம ஒரு மசாலா வறுத்து அரைக்க போறோம் அந்த மசாலா இந்த சாதத்துக்கு இன்னும் அதிகமான சுவையை கொடுக்கும். ரொம்ப டேஸ்டான இந்த சாதத்தை கண்டிப்பா எல்லார் வீட்டிலும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான சின்ன வெங்காய தொக்கு சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!
Ingredients
Method
ஒரு கடாயில் கடுகு வெந்தயம் சீரகம் வெள்ளை எள் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பெருங்காயத்தூளும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் புளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அரைத்து வைத்த வெங்காய விழுது சேர்த்து அரைத்து வைத்த பொடி தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி வைக்கவும் தொக்கு பதத்திற்கு வந்ததும் வெல்லம் சேர்த்து இறக்கி சாதம் போட்டு கிளறினால் சுவையான வெங்காய தொக்கு சாதம் தயார்.






