- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புரட்டாசி மாதத்தில் அசைவம் எடுக்க முடியலனா அதுக்கு பதிலா சைவத்தில் நிறைய ரெசிபி செய்யலாம். அந்த வகையில் சிப்பி காளான் வைத்து நிறைய ரெசிபிஸ் செய்யலாம். ஆனால் இந்த புரட்டாசி மாதத்தில் சிப்பி காளான் வைத்து கறிக் குழம்பு செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் நிறைய பேரு அசைவம் சாப்பிட முடியாமல் ரொம்ப கஷ்டப்படுவாங்க அவங்களுக்கு இந்த ரெசிபி ஒரு சூப்பரான வரப்பிரசாதமா இருக்கும். கண்டிப்பா இந்த ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க.
இட்லி, தோசை, சப்பாத்தி சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே அட்டகாசமா இருக்கும். புலாவ் வெஜிடபிள் சாதம் காளான் பிரியாணி எல்லாத்துக்குமே இந்த சிப்பி காளான் கறிக்குழம்பு அட்டகாசமா இருக்கும். வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தாலும் அவங்களுக்கு இந்த சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுத்து பாருங்க. இந்த டேஸ்டான ரெசிபிக்கு எல்லாருமே ரெண்டு தட்டு சாப்பாடு கூட சாப்பிடுவாங்க.
இந்த சூப்பரான அட்டகாசமான ரெசிபிக்கு கண்டிப்பா யாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க அப்படி விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ருசியான டேஸ்டான சிப்பி காளான் கறி குழம்புக்கு நம்ம மசாலா வறுத்து அரைக்க போறோம். கண்டிப்பா இந்த ரெசிபி ரொம்ப ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபிக்கு யாருமே வேண்டாம் அப்படின்னு சொல்லாம சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான சிப்பி காளான் கறி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கமகமக்கும் ஆரோக்கியமான சுவையான காளான் ஊத்தாப்பம் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் மிளகு, சீரகம்,சோம்பு,காய்ந்த மிளகாய், மல்லி விதைகள்,1 கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள சிப்பி காளான் சேர்த்து வதக்கவும்.
பிறகு மஞ்சள் தூள் கரம் மசாலா அரைத்து வைத்து விழுது உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வெந்ததும் கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சிப்பி காளான் கறி குழம்பு தயார்.






