மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? சூடாகவும், சத்தாகவும் ஏதாவது குடிக்க ஆசை இருக்கிறதா? நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், பாதாம் மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பானம் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி குடிக்குமாறு இருக்கும். மசாலா பால் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு பானம். இது மாலை நேரங்களில் தேநீர் மற்றும் காபிக்கு மாற்றாக அருந்தக் கூடிய பானமாக இருக்கிறது. இன்று இந்தியாவில் இவை கிடைக்காத காபி மற்றும் டீ ஷாப்புகளே கிடையாது எனும் அளவிற்கு மசாலா பாலுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மசாலா பால் உடலுக்கு நல்லது. இதற்கு இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம். இதுவரை நீங்கள் மசாலா பாலை கடைகளில் தான் குடித்திருப்பீர்கள். ஆனால் அந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம்.
பாதாம் மசாலா பால் | Padam Masala Pal Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 2 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 லி பால்
- 2 கப் சர்க்கரை
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 டீஸ்பூன் குங்குமப் பூ
- 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 30 பாதாம்
- 10 முந்திரி
- 10 மிளகு
செய்முறை
- முதலில் முந்திரி பருப்பு மற்றும் பாதாமை ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து, பின் பாதாம் பருப்பு தோலை நீக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின் பாதாம் மற்றும் முந்திரியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மைய அரைத்து அதன் பாலை மற்றும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் ஏலக்காய், மிளகு, பட்டை, குங்குமப் பூ, மஞ்சள் தூள், கிராம்பு சேர்த்து பால் நன்கு சுண்டி பாதியளவு வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.
- பின் மற்றொரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரை லிட்டர் பாலை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும். இந்த பால் சிறிதளவு சுண்டி வந்ததும் நாம் எடுத்து வைத்துள்ள பாதாம் பாலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- பின் நாம் ஏற்கனவே இறக்கி வைத்துள்ள மசாலா பொருட்கள் சேர்த்த பாலை பாதாம் பாலுடன் சேர்த்து அதனுடன் குங்குமப் பூ சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான பாதாம் மசாலா பால் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : மாலை நேரம் டீ, காபியுடன் சாப்பிட பாலக் கீரை நக்கட்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!