சப்பாத்தி, சோறுடன் சாப்பிட ருசியான பலாக்கொட்டை பட்டாணி கறி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

பலாகொட்டை கறி கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் கறி போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ கறிக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டைக் பட்டாணி கறியும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும். பலாக்கொட்டையை பயன்படுத்தி கறி வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். அதுவும் இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை சமையல் செய்யலாம். சுவைத்தவுடன் நாம் தூக்கி எறியும் பழங்களின் கொட்டை மற்றும் தோல் ஆகியவற்றில் ஏராளமான அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால், இவற்றை விதவிதமான உணவாக சமைத்து உண்பது நமது பாரம்பரிய வழக்கம்.

-விளம்பரம்-

பலாக்கொட்டைகளில் பல்வேறு ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. பழங்களை விட ஒரு மரத்தை உருவாக்கும் கொட்டையில் மரபணு கூறுகள், நோய்‌ எதிர்ப்பு சக்தி ஆற்றலை அதிகம் பெற்றிருப்பதுடன் செல்களை அழிவிலிருந்து காக்கும்‌ ஆற்றலையும் உடையது. இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். அதற்கு இந்த பலாக்கொட்டை பட்டாணி கறி ரெசிபி உதவும். தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ், கேரட், முருங்கை, கோஸ் என்று அதே காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த பலாக்கொட்டை பட்டாணி கறி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.‌

- Advertisement -
Print
No ratings yet

பலாக்கொட்டை பட்டாணி கறி | Palaakottai Pattani Curry Recipe In Tamil

பலாகொட்டை கறி கேரளாவின் பாரம்பரிய உணவு வகை. இது இந்தியாவில் பல்வேறு இடங்களில் செய்யப்படுகிறது. காளான் பொரியல், பன்னீர் கறி போன்ற பல்வேறு சைவ பொரியல்கள் அசைவ கறிக்கு சவால் விடுபவை ஆகும். அந்த வரிசையில் பலாக்கொட்டைக் பட்டாணி கறியும் அசைவப் பிரியர்களை சுண்டியிழுக்கும் ருசியையும் மணத்தையும் கொண்டிருக்கும். பலாக்கொட்டையை பயன்படுத்தி கறி வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும். தினமும் மதிய உணவுக்கு என்ன சைட் டிஷ் செய்ய என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும். எப்போதும் பீன்ஸ், கேரட், முருங்கை, கோஸ் என்று அதே காய்கறிகளையே செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். இந்த பலாக்கொட்டை பட்டாணி கறி சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள்.‌
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Palaakottai Pattani Curry
Yield: 4 People
Calories: 157kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பலாக்கொட்டை
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 3 பச்சை மிளகாய்
  • கடலை எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பலாக்கொட்டையை தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி நறுக்கிய பலாக்கொட்டை, மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்‌. பலாக்கொட்டை முக்கால் வாசி வெந்ததும் பட்டாணி சேர்த்து வேகவிடவும்.
  • பட்டாணி, பலாக்கொட்டை எல்லாம் ஒன்று சேர்ந்து தண்ணீர் சுண்டியதும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பலாக்கொட்டை பட்டாணி கறி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 157kcal | Carbohydrates: 8.3g | Protein: 2.8g | Fat: 1.1g | Sodium: 3.3mg | Potassium: 287mg | Fiber: 2.5g | Vitamin A: 54IU | Vitamin C: 12mg | Calcium: 22mg | Iron: 5.2mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பலாக்கொட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! ஒரு தட்டு சோறும் காலியாகும்!