பாலக் கீரை ஆம்லெட் இப்படி செய்து பாருங்கள், ஆஹா! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

பொதுவாக ஆம்லெட் செய்பவர்கள் முட்டையை ஊற்றி அதில் வெங்காயம், பெப்பர் எல்லாம் போட்டு தோசை கல்லில் எளிதாக போட்டு சாப்பிட்டு விடுவார்கள். ஆனால் ஆம்லெட்டிலேயே பாலக் சேர்த்து ஆரோக்கியமாக ஆம்லெட் செய்து  சுவையாகவும் வருவதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு பகுதியின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.

-விளம்பரம்-

இன்னைக்கு நாம சுவையான ஒரு பாலக் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பாலக், சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாக செய்வது எப்படி. சுவையான வித்தியாசமான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை சூப்பராக முடிக்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

பாலக் ஆம்லெட் | Palak Omelette Recipe In Tamil

நாம சுவையான ஒரு பாலக் ஆம்லெட் ரெசிபியை தான்பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதேசமயம் உடலுக்குஆரோக்கியம் தரக்கூடிய சில பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பாலக், சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாகசெய்வது எப்படி. சுவையான வித்தியாசமான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக்ஃபாஸ்ட்டை சூப்பராக முடிக்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, Side Dish, snacks
Cuisine: tamil nadu
Keyword: Palak Omelette
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கைப்பிடி ஸ்பினாச் கீரை
  • 1 வெங்காயம்
  • 2 முட்டை
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • சீஸ் துருவல் சிறிது
  • 1 தேக்கரண்டி பால்
  • வெண்ணெய் சிறிது
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • மிளகு தூள் தேவைக்கு ஏற்ப
  • மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப

செய்முறை

  • வெங்காயம், பச்சை மிளகாய், கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியில் உள்ள சதை பகுதியை நீக்கி பொடியாக நறுக்கவும்.
  • வெண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து உடையாமல் வதக்கவும். கீரை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
  • பாலில் உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். அதனுடன் முட்டை, சீஸ், வதக்கிய பொருட்கள் சேர்த்து கலந்து வைக்கவும்.
  • பானில் வெண்ணெயை உருக்கி ஆம்லெட் ஊற்றவும். வெந்ததும் சூடாக பரிமாறவும்.

செய்முறை குறிப்புகள்

காலை வேளையில் குழந்தைகளுக்கு கொடுக்க சிறந்த உணவு. இதனுடன் ஒரு பிரட், பால், பச்சை கீரை/காய்களுடன் தர கம்ப்ளீட் காலை உணவாக அமையும்

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg