Advertisement
சைவம்

அடுத்தமுறை வீட்டில் பூரி செய்தா மிஸ் பன்னமா பாலக்காடு கிழங்கு மசாலா இப்படி செய்து பாருங்க!

Advertisement

இன்று நாம் பூரி, சப்பாத்திக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பூரி கிழங்கு மசாலா ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். பொதுவாக நமது வீடுகளில் சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகள் செய்யும் போது அதனுடன் தொட்டு சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு குருமா தான் பெரும்பாலான வீடுகளில் செய்து பரிமாறுவார்கள். ஆனால் இன்று நாம் பாலக்காடு ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா செய்து பார்க்க போகிறோம்

இதையும் படியுங்கள் : சுவையான வெஜ் குருமா செய்வது எப்படி ?

Advertisement

ஆனால் இதில் உருளைக்கிழங்குக்கு பதிலாக நாம் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்த போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த பாலக்காடு பூரி கிழங்கு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பாலக்காடு பூரி கிழங்கு மசாலா | Palakadu Poori Kilangu MasalaRecipe in Tamil

Advertisement
2000/svg" width="0" height="0" style="display:block;width:0px;height:0px">
Print Recipe
இன்று நாம் பாலக்காடு ஸ்டைலில் பூரி கிழங்கு மசாலா செய்து பார்க்க போகிறோம் ஆனால் இதில் உருளைக்கிழங்குக்கு பதிலாக நாம் மரவள்ளிக்கிழங்கை பயன்படுத்த போகிறோம். இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இது போல் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு பூரி சாப்பிட வேண்டிய இடத்தில் இரண்டு பூரி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword poori kilangu, பூரி கிழங்கு
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 People
Calories 60

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp கடலை பருப்பு
  • ½ tbsp சோம்பு
  • 2 வர மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 5 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காம் நீள் வாக்கில் நறுக்கியது
  • ½ tsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ tsp மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் தண்ணீர்
  • 2 மரவள்ளி கிழங்கு வேக வைத்து மசித்தது
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் நாம் வைத்திருக்கும் இரண்டு மரவள்ளி கிழங்குகளை குக்கரில் போட்டு வேக வைத்து பின் வேக வைத்த மரவள்ளி கிழங்கை மசித்து தனியாக
    Advertisement
    வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி.
  • பின் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, அரை டீஸ்பூன் சோம்பு, இரண்டு வரமிளகாய் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு இந்த தாளிப்புடன் நம் நீள வாக்கில் நறுக்கி வைத்திருக்கும் ஒரு பெரிய வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய் மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்பு இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகி வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்தவுடன்.
  • பின் இதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் தக்காளி நன்கு மசிந்து வந்ததும் இதனுடன் ஒரு கப் அளவு தண்ணீர் மற்றும் நாம் மசித்து வைத்திருக்கும் மரவள்ளி கிழங்கு சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடுங்கள்.
  • பின் பூரி கிழங்கு மசாலா கெட்டியான பதத்திற்கு வந்ததும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் காரசாரமான பாலக்காடு பூரி கிழங்கு மசாலா இனிதே தயாராகிவிட்டது

Nutrition

Serving: 4people | Calories: 60kcal | Carbohydrates: 48g | Protein: 16g | Fat: 2.5g | Saturated Fat: 2.1g | Potassium: 134mg | Fiber: 4.7g
Advertisement
Prem Kumar

Recent Posts

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

3 நிமிடங்கள் ago

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

1 மணி நேரம் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

4 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

6 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

7 மணி நேரங்கள் ago