- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Fry
நம்ம எத்தனையோ விதமா சிக்கன் உணவுகளை சமைத்திருப்போம். ஆனால் எந்த ஒரு மசாலாவும் சேர்க்காமல் ரொம்பவே குறைந்த பொருட்கள் வச்சு ரொம்ப சுவையான ஒரு பள்ளிப்பாளையம் சிக்கன் வறுவல் செய்ய போறோம். ரொம்ப ரொம்ப சுவையானது இதுக்காக தனியா எந்த ஒரு மசாலா பொருளும் தயார் செய்யணும் அப்படிங்கிற அவசியமே கிடையாது..
இது வெறும் காய்ந்த மிளகாய் இஞ்சி பூண்டு விழுதையும் மட்டுமே வச்சு செய்யக்கூடிய ஒரு வறுவல். இந்த பள்ளிபாளையம் சிக்கன் எல்லா வகையான சாதத்திற்கும் சைட் டிஷ்ஷா சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையா இருக்கும். ஒரு ஒரு முறையும் சிக்கன் சமைக்கிறதுக்கு நிறைய மசாலா பொருட்களை வாங்கி அரைச்சு இல்லனா கடைகள் கிடைக்கிற பொடிகள் வாங்கி அதை யூஸ் பண்ணி தான் சமைக்கணும்.
அப்படிங்கிற ஒரு விஷயம் இருக்கிறப்போ அந்த மாதிரி எதுவுமே இல்லாமல் சுலபமா வீட்ல இருக்குற ஒரு மூணு பொருள் நான்கு பொருளை வைத்து ஒரு சுவையான வறுவல் செய்து சாப்பிட போறோம். இந்தப் பள்ளிபாளையம் சிக்கன் குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை எல்லாருக்குமே ரொம்பவே புடிச்ச ஒரு வறுவலாக இருக்கும். இந்த ருசியான பள்ளிபாளையம் சிக்கன் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு காய்ந்த மிளகாய் இரண்டுமூன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
காய்ந்த மிளகாய் நன்றாக வதங்கிய பிறகு அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுத சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.பிறகு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.
சிக்கனில் ஏற்கனவே நீர் இருப்பதால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும் .அவ்வப்போது மூடியை திறந்து சிக்கனை நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்கவும்.
இந்த பள்ளிபாளையம் சிக்கன் காய்ந்த மிளகாய் உள்ள காரம் முழுவதும் இறங்கி சிக்கனின் சுவை நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி தலைகளை தூவி இறக்கி விடவும்.
அனைத்து வகையான சாதத்துடனும் இந்த பள்ளிப்பாளையச் சிக்கன் சாப்பிடுவதற்கு பக்காவான ருசியில் இருக்கும்.






